பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

பூண்டு பாலை குடிப்பதால் செரிமான சக்தியை உண்டாக்கும்! வயிற்று பூச்சி அழியும்!

பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கிருமிகள் அழியும். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

செரிமானம் சீராக செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும். மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.

உங்கள் முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

உங்களுக்கு திடீரென சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!