பெண்களுக்குத் தேவை சிம்பிள் மேக்கப் மட்டும்தான், அப்படின்னா என்ன தெரியுமா?

பெண்களுக்குத் தேவை சிம்பிள் மேக்கப் மட்டும்தான், அப்படின்னா என்ன தெரியுமா?

முதலில் முகத்தை நன்கு கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். பின்பு ஃபவுண்டேஷனை முகம், கழுத்து, காது மடல்கள் முதலிய இடங்களில் சீராகத் தடவ வேண்டும். அதன்மேல் ஐஸ் கட்டியைத் தடவினால் மேக்கப் அதிக நேரம் முகத்தில் தாக்குப் பிடிக்கும்.

அதற்குப்பின்னர், முகத்தை சந்தனப்பவுடர் அல்லது ரோஸ் பவுடரால் ஒற்றி, ஷேடோ தேவையெனில் உடையின் நிறத்திற்கேற்றவாறு கண்ணின் மேல்புறத்தில் புருவத்திற்குக் கீழே தடவலாம். கண்கள் சிறியனவாய் இருந்தால் ஐப்ரோ பென்சில் மூலம் கண்களுக்கு இலேசாக ஒளியூட்டிவிடலாம்.

லிப்ஸ்டிக் பிரஸ் கொண்டு முதலில் உதட்டின் மேல்அவுட்லைன்வரைந்துகொண்டு, பிரஷ் கொண்டு உதடு முழுவதும் பூச வேண்டும். பின்னர் ஐஸ் கட்டியால் உதடுகளை நீவி, அடுத்து அதிகப்படியான லிப்ஸ்டிக்கை டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுக்க வேண்டும். ‘ரூஜைஇரு கன்னங்களிலும் இலேசாக ஆள்காட்டி விரலால் அல்லது பிரஷால் பூச வேண்டும்.

மாலை, இரவு நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் கொஞ்சம்ஹெவிமேக்கப் இட்டுக் கொள்ளவும். எப்படி என்றாலும் வீட்டிற்கு வந்தவுடன், முகத்தில் கிளன்சிங் மில்க் அல்லது தேங்காய் எண்ணெயை மேக்கப் இட்ட இடங்களில் தடவி 5 நிமிடம் கழித்து, பஞ்சினால் துடைத்து பின்னர் முகத்தை சோப் தேய்த்துக் கழுவலாம்.

நிறம் குறைவாக இருப்பவர்கள் வெளியில் தெரியும் உடற்பகுதிகளில் அதாவது பின்கழுத்து, கைகள் போன்றவற்றிலும் இலேசாக ரோஸ் பவுடரை இட்டுக் கொள்ள வேண்டும். மேக்கப்புடன் உறங்குவது நல்லதல்ல. முகத்திலுள்ள துவாரங்கள் தொடர்ந்து அடைக்கப்படும்போது சருமம் கெட்டுப் போய்விட வாய்ப்பிருக்கிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்