முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

முகம் அழகு பெறுவதற்கு இதோ சில சிம்பிள் டிப்ஸ்… சூப்பர் அழகியாகலாம்

மேக்கப்
செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும்.

பேஸ்பேக்
களிமண் போன்று கெட்டியாகவும், பவுடராகவும் கிடைக்கிறது. ‘முல்தானி மட்டிஎனப்படும்
பவுடர், முட்டையின் வெண்கரு, கடலை மாவு, பாசிப்பயறு மாவு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு, முகத்திற்கு ஆவி பிடித்து, ஃபேஸ் பாக்கினை உபயோகிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.

ஹெர்பல்
ஃபேஸ்பாக் உபயோகித்தால் முகத்திலுள்ள சதைகள் இறுகி, முகம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்கும்; பளபளப்பாகவும் காட்சியளிக்கும். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஃபேஸ் பாக் உபயோகிப்பது நல்லது.

காம்பாக்ட்
எனப்படும் மேக்கப் சாதனத்தை முகம் களை இழந்து காணப்படும் நேரங்களில் பயன்படுத்தலாம். முகத்தைக் கழுவிவிட்டுப் பவுடர் போல் இருக்கும் காம்பாக்டை முகத்திற்குச் சரிசமமாய் இட்டுக் கொண்டால், முகம் பளிச்சென இருக்கும். வெளியூர் செல்லும்போதுகூட இதனைப் பயன்படுத்துவது நல்லது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்