இடுப்புக்குக் கீழே நீளமான கூந்தலுக்கு ஆசையாக இருக்கிறதா… ரொம்ப ஈசிதான்…

இடுப்புக்குக் கீழே நீளமான கூந்தலுக்கு ஆசையாக இருக்கிறதா… ரொம்ப ஈசிதான்…

அதனால் நீளம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாய், ஆரோக்கியமாக அமைந்து விடுவதில்லை. பரம்பரையாய்ப் பெற்றோருக்கு உள்ளதைப் போல் பிள்ளைகளுக்கும் தலைமுடி அமைய வாய்ப்புண்டு. சிலருக்கு இயற்கையிலேயே குறைவாகத் தலைமுடி இருக்கலாம். அவர்கள் அதிகக் கவனம் செலுத்தித் தம் முடியைப் பேணவேண்டும். ‘கார் கூந்தல்என்று அக்காலத்தில் பெண்களின் கூந்தலைப் புகழ்ந்தனர்.

தலைமுடி அதிகமாய் இருந்தால்தான் அழகு என்பதில்லை. இருக்கும் தலைமுடியை உதிராமல் சுத்தமாகப் பராமரித்தாலே போதும். வாரம் இருமுறை ஷாம்பூ அல்லது சீயக்காய் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். கெமிக்கல் ஷாம்பூவைவிட ஹெர்பல் ஷாம்பூ நல்லது. இதைப் பயன்படுத்தினால் தலைமுடி பிசுக்குப் போல ஒட்டிக் கொள்ளாமல் நன்றாக அலச வேண்டும். இல்லையென்றால் தலைமுடி பிசுக்காகி ஈறும், பொடுகும் பெருகிவிடும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆரோக்கியமான உணவும், நிம்மதியான
தூக்கமும் அமையப் பெற்றவர்களுக்குத்தான் முடி நன்றாக வளரும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்