உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?

உங்கள் முகத்திற்கு ஏற்ப புருவம் எப்படி வடிவமைப்பது தெரியுமா?

வட்ட முகம்:

வட்டமான
முகத்தை நீள்வட்டமாக காட்டும்படி புருவம் அமைய வேண்டும்.
அதனால் புருவமானது பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக்
குறுகிக் கொண்டே செல்ல வேண்டும்.
வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றினால் அழகாக
இருக்கும்.

நீள்வட்ட
முகம்:

இவர்கள்
புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம்
கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும்.
வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள்.
முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

சதுர முகம்:

சதுர முகத்தை வட்ட முகமாக
காட்டும் பணியை புருவங்கள் செய்ய
வேண்டும். அதனால் புருவ வளைவு
அகன்று இருக்க வேண்டும். புருவ
முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான்
முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக்
காட்டும்.

நீளமான
முகம்:

இந்த வகையான முக அமைப்பு
உள்ளவர்கள் புருவம் மிகச் சிறியதாக
இருந்தால்தான் முகம் கொஞ்சமாவது வட்ட
வடிவில் தென்படும். அதனால் நேராக, வளையாமல்
சிறியதாக புருவம் அமைத்துவிடுவது நல்லது.
புருவத்தின் ஓரங்களில் மட்டும் மிகச்சிறு அளவு
வளைந்து விடுங்கள்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்