பார்லருக்குப் போய்த்தான் பிளீச் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே செய்ய முடியுமே

பார்லருக்குப் போய்த்தான் பிளீச் செய்ய வேண்டுமா? வீட்டிலேயே செய்ய முடியுமே

பெண்கள்
மட்டுமல்ல ஆண்களும் கூட பிளீச் செய்து
கொள்வது நல்லது.  தரமான
கிரீம் வாங்கி, அதில் கொடுக்கப்பட்டிருக்கும்
ஆக்டிவேட்டர்எனப்படும்
அம்மோனியா கலந்த பவுடருடன் கலந்து
கொள்ள வேண்டும். கை விரலால் கண்,
புருவம், உதடு ஆகியவை தவிர
கழுத்துப் பகுதிகளில் தடவி,15 அல்லது 20 நிமிடம்
கழித்து ஈர டவலால் கிரீமைத்
துடைத்து எடுக்க வேண்டும். பின்பு
ஒரு ஐஸ்கட்டியை பிளீச் செய்த பகுதிகளில்
2 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அன்று முகத்திற்குச் சோப்பு போட்டு கழுவக்கூடாது
என்பது முக்கியமாகும். முகத்திலுள்ள சிறு முடிகள்பிளீச்ஆகி, சற்றுத் தங்க நிறத்தில்
முகம் பளிச்சென தெரியும். ஆண்கள் தங்கள் மீசை,
கிருதா ஆகிய இடங்களில் கிரீம்
படாமல் மற்ற இடங்களில் தடவலாம்.
தலைமுடியில் இந்த கிரீம் படாதபடி
பார்த்துக் கொள்வது அவசியம்.

கை, கால்களுக்கு சில பெண்கள் பிளீச்
செய்ய விரும்புகிறார்கள். கிரீம் விலை அதிகம்
என்பதால் பவுடர் பிளீச் செய்யலாம்.
முகத்திற்குப் பிளீச் செய்யப் பயன்படும்
பவுடருடன் கால் பங்கு அம்மோனியா
முக்கால் பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு
கலந்து பிரஷ் கொண்டு கால்,
கால்களில் பூசி, 15 நிமிடம் கழித்துக் கழுவிவிட
வேண்டும். மாதம் இருமுறை மட்டும்
பிளிச் செய்வது போதும்.

 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்