அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்) | Athimathuram benefits in Tamil

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை செல்வதும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முயற்சிப்பதையும் அனைவருமே வாடிக்கையாக்கியுள்ளோம். ஆனால் இந்த நோய்களே நமது உடம்புக்கு வராமல் கூட தடுக்கலாம் தானே? அதுவும் நம் இந்தியா முக்கிய மூலிகைகளின் சுரங்கமாக விளங்குகிறது. நம் ஊர் மூலிகைகள் மூலமாகவே கொடிய நோய்கள் வராமல் தடுக்க முடியும். அந்த மாதிரி மிக முக்கிய மற்றும் உயிரையே காப்பாற்றும் மூலிகை வகைகளில் ஒன்று தான் “அதிமதுரம்”. இந்த இயற்கையின் கொடையான அதிமதுரம் தரும் நன்மைகள் பற்றியது தான் இந்தப் பதிவே!

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது. குழந்தைகளுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துவதற்கும், சளி தொல்லைகளில் இருந்து விடுபடவும் பயன்படும். இதுவே பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. அவை, கர்பிணிகளுக்கு நல்லது; மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்; உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். ஆண்களுக்கும், அதிமதுரம் பல்வேறு நன்மைகளையே தருகிறது. உதாரணமாக, ஆண்மை பல மடங்காகப் பெருக, இரத்த ஓட்டம் சீராக, உயிர் நாடி வளம்பெற எனப் பட்டியல் நீளும்.

அதிமதுரத்தின் நன்மைகள்

குடல் புண்கள் சரியாக:

அதிமரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர குடலில் உள்ள புண்கள் சரியாகும். மேலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வரும் அல்சர் புண்களும் எளிதில் குணமடையச் செய்யும் வல்லமை பெற்றது. இந்தப் பொடியை காலை மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொண்டால், குடல் புண்கள் தவிர மற்ற அனைத்து வயிறு சம்மந்தமான பிரச்சினைகளும் நீங்கும். செரிமானம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் கூடும்.

இருமல் சரியாக:

அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும். பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும்.

மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஒருமுறை மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கு மீண்டும் வராமலும் இந்த அதிமதுர மூலிகை பயன்படுகிறது.

கர்ப்பிணிகள்:

கர்ப்பிணிகள் தங்களது உணவில் அதிமதுரம் சேர்த்துவந்தால் சுக பிரசவமாக பெரிதும் உதவும். இதை பொடியாக்கியோ அல்லது துண்டுகளாக மாற்றியோ நீரில் ஊறவைத்து பயன்படுத்தலாம். சூடு நீரில் கலந்து குடிப்பதும் நல்லது. பிரசவ வலி வராதவர்களுக்கு/வந்தவர்களுக்கு, இந்த அதிமதுர பொடி கலந்த நீரைத் தருவதன் மூலமாக நார்மல் டெலிவரியை எதிர்பார்க்கலாம். இதுவொரு சக்திவாய்ந்த மூலிகை.

குழந்தைகள் & பெண்கள்:

ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சளி, இருமல் தொல்லை வராமல் அதிமதுரம் பயன்படுத்துவதன் மூலமாக கட்டுக்குள் வைக்கலாம். அதிமதுர பொடி கலந்த நீரை குழந்தைகளுக்கு அடிக்கடி தருவது நல்ல பலன் தரும். ஞாபக சக்தி அதிகரிக்கவும், உடல் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாய் இந்த மூலிகை இருக்கும்.

பெண்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள், சளி, இருமல் நீங்க, மூட்டு வலி சரியாக என பெரிய லிஸ்ட்டே உள்ளது. பெண்களுக்கு மிகச்சிறந்த நன்மைகளை அதிமதுரம் தரவல்லது. சுடு நீரில் இதன் பொடியைக் கலந்து தினமும் கூட குடிக்கலாம்.

ஆண்கள்:

அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்த்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.

அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு, சிறுநீர் பையில் புண்கள் உண்டாகிறது. அதிமதுர மூலிகையை ஊறவைத்து அதன் நீரை தினமும் குடித்து வந்தால் சிறுநீர்ப்பை கிருமிகள் அழிந்து, புண்கள் சரியாகும். ஆண்களுக்கு (பெண்களுக்கும் தான்) சிறுநீரக கற்கள் உருவாவதை சுத்தமாகத் தடுக்குமென்று பல சித்த மருத்துவ குறிப்புகள் உள்ளன.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்