தொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர்யம்! மனோசக்தி தரும் செடி!

தொட்டாற் சிணுங்கி செடி பார்க்க மட்டும் ஆச்சர்யமில்லை அது தரும் பயன்களும் ஆச்சர்யம்! மனோசக்தி தரும் செடி!

தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம்.

ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி குறையும். 

பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு என்கின்ற பெரும்பாடு நோய் தீரவேண்டுமானால் தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அவ்விலையோடு தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து பசு மோரில் கலந்து பெண்கள் அருந்த நோய் குணமாகும்

மேனியில் ஏற்படும் படை, தேமல் போன்ற நோய்கள் நீண்ட நாள் இருந்து தொல்லை கொடுக்கும் வேளையில் இவ்விலையைப் பறித்து வந்து , அதில் சாறு எடுத்து அதை நோய் மீது தடவ விரைவில் குணமாகும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்