அடித்தது ஜாக்பாட்! 9 வயது இந்திய சிறுமிக்கு லாட்டரியில் ரூ.7 கோடி!

அடித்தது ஜாக்பாட்! 9 வயது இந்திய சிறுமிக்கு லாட்டரியில் ரூ.7 கோடி!

துபாயில் வசித்து வரும் இந்தியப் பள்ளி மாணவி எலிஸா, லாட்டரி குலுக்கலில், இந்த பரிசை வென்றுள்ளார். இவரது தந்தை கடந்த 19 ஆண்டுகளாக, துபாயில் வசித்து வருகிறார். இவர், துபாய் ட்யூட்டி ஃப்ரி என்ற வரியில்லா லாட்டரியின்கீழ், மில்லினியம் மில்லினியர் போட்டியில், 2004ம்ஆண்டு முதலாக, விளையாடி வருகிறார். அதில், அவருக்கு லக்கி நம்பர் 9 என்பதால், கூட்டுத்தொகை 9 வரும் 0333 என்னும் எண்ணை ஆன்லைனில், தன் மகள் எலிஸா பெயரில் வாங்கியுள்ளார். அதில்தான், எலிஸாவுக்கு, ரூ.7 கோடி லாட்டரி கிடைத்துள்ளது. 

இதுதவிர, ஏற்கனவே, எலிஸாவின் பெயரில், அவரது தந்தை கடந்த 2013ம் ஆண்டு லக்ஸரி மெல்லாரன் கூபே எனும் சூப்பர் கார் ஒன்றை, வரியில்லா லாட்டரியில் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சொல்லி வைத்து கோடி கோடியாக லாட்டரி அடிக்கும் இந்த தந்தை, மகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!