சியோமியின் முதல் 5G ஸ்மார்ட்ஃபோன். அதிரவைக்கும் விலையில்!

சியோமியின் முதல் 5G ஸ்மார்ட்ஃபோன். அதிரவைக்கும் விலையில்!

சாம்சங் நிறுவனத்தை தொடர்ந்து தற்போது சியோமி நிறுவனமும் இந்த 5G சேவையை பற்றிய அறிவிப்பை வெளியீட்டுள்ளது.


இந்த புதிய மாடலின் பெயர் சியோமி Mi Mix 3 என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பார்சிலோனாவில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டது. இதுவே சியோமியின் முதல் 5G ஸ்மார்ட் போன் ஆகும்.


இதன் தரவு வேகம் 4G LTE  விட 10 மடங்கு அதிகமாக  இருக்கும் என்று சியோமி கூறியுள்ளது குறிப்பிடத்க்கது.

இந்த 5G சேவையை தருவதற்காக இந்நிறுவனம் மற்ற டெலிகாம் நிறுவனங்களான டிம், ஆரஞ்சு மற்றும் வோடபோன் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் வைத்துள்ளது.


இந்த சியோமி Mi Mix 3 -ல் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) சேவையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இது கூகுள் அசிஸ்டன்ட்(Google Assistant) போன்று இயங்கும் ஸியோமியின் சொந்த தயாரிப்பான சியோ ஏ ஐ அசிஸ்டன்ட் (Xio A.I Assitant).


6.39 இன்ச் டிஸ்ப்ளே இந்த ஸ்மார்ட் போனில்  Snapdragon 855 பிராசசர், ஹைப்ர்டிக் கூலிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. கேமெராவை பொறுத்தவரையில் 24 Mp மற்றும் 2 Mp முன்பக்க கேமெராக்கள் மேலும் பின்பக்க 12 Mp கேமெராவும் அடங்கும்.  இதன் பேட்டரி திறன் 3800 mAh ஆகும்.

இத்தகைய சிறப்பம்சங்களை கொண்ட இந்த  சியோமி Mi Mix 3  ஸ்மார்ட் போனின் விலை இந்திய மதிப்பில் 48,000 ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related posts

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?