உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பலர் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் சைனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வானூர்தியில் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருக்கும் மக்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வர தடை விதிக்கப்பட்டுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இத்தாலி நாட்டில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் பலி எண்ணிக்கை 41 லிருந்து 148 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து இத்தாலி நாட்டில் மட்டும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,858 ஆக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதில் குணமடைந்தவர்கள் மட்டும் சுமார் 414 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வைரஸ் தொற்று நோயினால் இறந்தவர்களின் அனைவருமே 66 முதல் 90 வயதுடையவர்கள் என அறிக்கையை அந்நாட்டு மருத்துவத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1,01,955 ஆக உள்ளது.
இதனால் இறந்தவர்கள் மட்டும் 3,466 மற்றும் முழுமையாக குணமடைந்தவர்கள் 56,123 பேர். இந்நிலையில் இந்த வைரஸ்க்கு எதிராக தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்துவிடும் என சீன மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.