ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு சர்க்கரை சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் முகத்தினை நன்றாகக் கழுவி கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.
தக்காளி மற்றும் தேன் கலந்த கலவை முகத்தில் தோன்றும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். தேனில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும். ஒரு தக்காளியை எடுத்து அரைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் விட்டு பின்னர் கழுவுங்கள். இந்த முறையை வாரத்தில் 3 முதல் 4 முறை செய்யலாம்.
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தில் உள்ள துளைகளைச் சரி செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. ஒரு தக்காளியை எடுத்து அரைத்து பேஸ்ட்டாக மாற்றி அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு எலுமிச்சை சாறினை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். இதனை வாரத்தில் ஒரு முறை செய்தால் போதுமானது.