எல்லோரது வாழ்க்கையிலும் உயர்வும் இருக்கும் தாழ்வும் இருக்கும். எனினும் அன்பு என்ற ஒன்று இருந்தால் அதுஎந்தச் சூழ்நிலைத் தடைகளையும் உடைத்துக்கொண்டு வெளிப்பட்டே தீரும். அதற்கு உதாரணம்தான் நெவேடா மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் வில்லியம் ரோபிலோ
அவனது தாய்க்கு அவனையும் சேர்த்து மூன்று குழந்தைகள். அவர்களை காப்பாற்ற அவர் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் உரிய போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்ட தனது தாய்க்கு கார் வாங்கிக் கொடுக்க வில்லியம் திட்டமிட்டான்.
இதற்காக பணம் அவன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள பலருக்கு அன்றாடப் பணிகளில் உதவி செய்து பணம் சேர்த்தான் இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் காரை மலிவு விலையில் விற்க காத்திருந்த ஒருவரைக் கண்டுபிடித்து அந்தக் காரை வாங்க முடிவு செய்தான் அதற்காக தீவிரமாக உழைத்து பணமும் சேர்க்க ஆரம்பித்தான்.
இறுதியில் காரை வாங்கும் நாளும் வந்தது. தனது மகனின் அன்பைக் கண்டு அந்த தாய் நெக்குருகிப் போனார். வில்லியம் போன்ற ஒரு மகனை பெற தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அது தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. தூய இதயத்தின் பொறுப்புணர்வு மிக்க செயல் பலரது மனதைக் கவர்ந்துள்ளது.