Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்நாடகாவில் வேகமாக பரவும் குரங்கு காய்ச்சல்! எத்தனை பேர் பலி தெரியுமா?

சிவமோகா மாவட்டத்திற்கு உட்பட்ட அரலகோடு எனும் கிராமத்தில்
தான் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 15 பேர் குரங்கு
காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த 15 பேர் தவிர குரங்கு காய்ச்சலுக்கு 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். குரங்கு
காய்ச்சல் ஏற்பட்டுள்ள அரலகோடு கிராமத்தில் கர்நாடக சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

   அந்த கிராமத்தில்
இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குரங்கு
காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் கூட காய்ச்சல்
வேகமாக பரவுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனை உண்மை என்று நம்ப வேண்டாம்
என கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. குரங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடியது தான்
என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  சிவமோகா மாவட்டத்திற்கு
உட்பட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் லங்கூர் குரங்குகள் மற்றும் மக்காக வகை குரங்குகள்
மூலம் இந்த காய்ச்சல் பரவுகின்றன. வனப்பகுதியில் இறந்து கிடக்கும் இந்த குரங்குகளின்
உடலில் தோன்றும் உன்னிப் பூச்சிகள் மனிதர்களை கடிப்பதால் குரங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.
ஒரு நபருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர் மூலமாக சக மனிதர்களுக்கும் ஏற்படும்.

   குரங்கு காய்ச்சலால்
குரங்குகளுக்கும் பாதிப்பு உண்டு. எனவே ஆங்காங்கே செத்துக்கிடக்கும் குரங்குகளை அப்புறப்படுத்தும்
பணியிலும் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் கடந்த
1957ம் ஆண்டு முதல் முறையாக குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பெண்களை பாடாய்படுத்தும் சீரற்ற மாதவிடாய்! அசர வைக்கும் தீர்வு!

tamiltips

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

tamiltips

எவ்ளோ ஷாம்பு போட்டாலும் முடி தான் கொட்டுதா பொடுகு போகலையா? இதோ நிரந்தர தீர்வு!

tamiltips

உடல் உறவுக்கு சிறிது நேரத்திற்கு முன் இதை மட்டும் செய்யுங்கள்..! பிறகு கட்டிலில் செம மஜா தான்! என்ன தெரியுமா?

tamiltips

எலும்புக்குள் என்ன இருக்கிறது? ஏன் தோலுக்கு அடியில் எலும்பு ஒளிந்திருக்கிறது.

tamiltips

இந்த ஹானர் செல்போனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.4 லட்சமாம்! செம தரமான காரணம்!

tamiltips