நீளமான கழுத்து உள்ள பெண்கள் எப்படி நகை அணிய வேண்டும் என்று தெரியுமா?
நீளமான கழுத்துள்ளவர்கள் சிறிய டாலர் உள்ள கழுத்தை ஒட்டிய செயின், கழுத்தை ஒட்டிய நெக்லஸ், சிறிய காது தோடும் அணிந்தால் எடுப்பாகத் தெரிவார்கள். இதுபோலவே வட்ட முகத்திற்குச் சிறிய வட்டமான வளையம் அணிந்தால் அழகாய் இருக்கும். பெரிய முகமாய் இருந்தால் கனமான, பெரிய அணிகலன்களை அணிவது பொருத்தமாக இருக்கும். நமக்குப் பொருத்தமாய் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு நகைகளை வாங்குவது நல்லது. அழகாக இருக்கிறதே என்று வாங்கிக் கொண்டு, பின்னர் அதனை வாங்கிவிட்டோமே என்பதற்காக அணிய வேண்டாம்....