Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ரயில் பயணமா? 20 நிமிசம் முன்னாடியே ஸ்டேசனும் போகனும்! இல்லனா ரயில்ல போக முடியாது!

   உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் கும்பமேளா தொடங்க உள்ளது.
இதற்காக நாடு முழுவதும் மட்டும் இன்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான இந்துக்கள்
உத்தரபிரதேசத்திற்கு வருகை தர உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால்
உத்தரபிரதேச ரயில் நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

  கும்பமேளாவிற்கு தீவிரவாத
அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும்
உத்தரபிரதேசத்தில் அதிக மக்கள் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பல மடங்கு
அதிகரிக்கப்பட்டுள்ளது- அம்மாநிலத்தில் உள்ள 202 ரயில் நிலையங்களில் அதிநவீன பாதுகாப்பு
முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலைய வாயில்களில் ஒவ்வொரு பயணியையும் ஒரு நிமிடம்
முதல் 3 நிமிடங்கள் வரை சோதனையிட முடிவு செய்ப்பட்டுள்ளது.

  எனவே ரயில் நிலையங்களுக்கு
வரும் பயணிகள் தங்கள் ரயில் புறப்படும் நேரத்திற்கு 20 நிமிடங்கள் முன்னதாக வந்து விட
வேண்டும். அப்போது தான் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அவர்களை உள்ளே அனுமதிக்க முடியும்
என்று ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியுள்ளனர். கடைசி நேரத்தில் வருபவர்கள் ரயில்
நிலையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  விமானத்தில் பறக்க
வேண்டும் என்றால் செக்யூரிட்டி செக்கிற்கு என்று ஒன்றரை மணி நேரம் முன்னதாகவே வர வேண்டிய
நிலை உள்ளது. ஆனால் தாங்கள் 20 நிமிடங்கள் மட்டுமே முன்னதாக வரச் சொல்வதாகவும், இதனை
பயணிகள் தங்கள் பாதுகாப்பை கருதி பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த முறை வெற்றிகரமாக உத்தரபிரதேசத்தில் பின்பற்றப்பட்டால் நாடு முழுவதும் அமலுக்கு
வரும் என்றும் கூறப்படுகிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

tamiltips

தலைப்பாகை கலருக்கு மேட்ச்சாக ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்! இந்திய கோடீஸ்வரரின் விநோத ஆசை!

tamiltips

படுக்கை அறை சமாச்சாரங்கள்..! எல்லா‌ ஆண்களும் உறவின் போது செய்யும் தவறுகள் இவை தான்..!

tamiltips

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன தெரியுமா?

tamiltips

கர்ப்பிணிகளின் பெரும் சந்தேகம் !! எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஒன்றுபோலவே அறிகுறிகள் தென்படும் ??

tamiltips

கமகம சாம்பார் பொடி வீட்டிலேயே செய்யுங்கள்! இன்னும் சில சுவையான சமையல் குறிப்புகள்!

tamiltips