சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லது. அடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு நிகழாது என்பது முழு உண்மை அல்ல. இதனை நம்பி உறவுகொண்டு மீண்டும் கருத்தரிப்பதால் தாயின் உடல் பாதிக்கப்படும்.ரத்தக்கசிவு போன்ற பிரச்னை இருப்பவர்கள், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே உறவில் ஈடுபட வேண்டும்.
தாம்பத்திய உறவு இன்பம் தருவதாக இருக்கவேண்டுமே தவிர, மீண்டும் குழந்தை உருவாகிவிடும் என்ற அச்சம் தருவதாக இருக்கக்கூடாது. அதனால் இந்த விஷயத்தில் ஆண், பெண் இருவரும் அவசரப்படாமல் நிதானமாகவே அணுகவேண்டும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.