ஆஸ்திரேலியாவில் அருவி ஒன்று மேல்நோக்கி பறந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அருகில் உள்ளது ராயல் தேசிய பூங்கா. பெரும் மழை காரணமாக இங்கு பலத்த காற்று வீசிவருகின்றது. நகரத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராயல் தேசிய பூங்காவில்உள்ள அருவியில் தண்ணீர் கீழ் நோக்கி விழுவதற்கு பதிலாக மேல்நோக்கி பறந்தது. இதற்கு காரணம் புயல் காற்று தான் என கூறப்பட்டுளளது.
இங்கு மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் அருவி கீழே விழாமல் மேலே பறந்துள்ளது. வானிலை காரணமாக நிகழ்ந்த இந்த அரிய நிகழ்வை பலரும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
— 7NEWS Sydney (@7NewsSydney) August 10, 2020