சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று , UTI : Causes, Symptoms and Home Remedies

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்றால் என்ன? (What is Urinary Tract Infection?)

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீர் வெளியேறும் பாதையின் எந்த பகுதியிலும் வரக் கூடும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் பிற பகுதிகளிலும் நோய்த்தொற்று ஏற்படக் கூடும்.
குடலிலிருந்து வெளியேறும் பாக்டீரியா ஒரு முக்கிய காரணியாக இந்த நோய்த்தொற்றுக்கு இருக்கின்றது, கூடவே பூஞ்சை மற்றும் வைரஸ் கிருமிகள் கூட இந்தப் பிரச்சனைக்கு  முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன.இந்த தொற்றால் தாக்கப்பட்டவர்கள் சிறுநீர்ப் பை முழுமையாகச் சிறுநீரை வெளியேற்றாமல் இருப்பது போன்ற உணர்வு தொடர்ச்சியாக பெற்று பெரும் அவதிக்கு ஆளாவார்கள்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள் (Reasons of urinary tract infection)

1.சிறுநீர்  முழுமையாக வெளியேறாத நிலை
கர்ப்ப காலத்தில், பல்வேறு மாற்றங்கள் ஒரு பெண்ணின் சிறுநீரக வடிவில் ஏற்படும்.பெண்ணின் கருப்பை சிறுநீர்ப்பையில் வலதுபுறமாக அமைந்துள்ளது.கரு வளர ஆரம்பிக்கும் போது, ​​இது சிறுநீர்ப்பையில் அழுத்தத்தை அதிகரிக்கிறது.அதனால் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் சரியாக வெளியேற முடியாமல் தடுக்கப் படுகிறது மற்றும் அங்கே நுண்ணுயிரிகளை வளர்க்க ஆரம்பிக்கிறது. இது ஒரு தொற்றுக்கு வழிவகுக்கும்.



2. அடிக்கடி சிறுநீர் உணர்வு
நீங்கள் அடிக்கடி சிறுநீர் வருவது மாதிரியான உணர்ச்சிகளைப் பெறுவது. ஆனால் உங்களால் துளியாக துளியாக தான் சிறுநீரைக் கழிக்க இயலும்.உங்கள் ஈரம் கசிந்த உள்ளாடை தோலோடு தொடர்பு கொள்ளும்போது, ​​அது நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும்.



3.அசுத்தமான கழிப்பறைகளைப் பயன்படுத்துதல்
வீட்டில் அல்லது பொதுப் பகுதிகளில் அழுக்கு கழிப்பறைகளைப் பயன்படுத்துவது தொற்றுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.  பெரும்பாலான நேரங்களில்,பொது கழிப்பறையை மக்கள் சுகாதாரமாகப் பயன்படுத்தாததால்,அங்கே அனைத்து வகையான கிருமிகளும் உருவாகி இருக்கும்.சந்தையில் எளிதில் கிடைக்கும்   கழிப்பறை சுத்திகரிப்பானை வாங்கிப் பயன்படுத்துங்கள். மேற்கத்தியக் கழிப்பறை இருக்கை பெரும்பாலும் சிறுநீர் சிந்தி இருக்கும்.அதில் ஒரு நபர் அமர்ந்து போது, ​​அனைத்து கிருமிகள் உடலில் நுழைந்துவிடும்.



4.குறைந்த அளவு தண்ணீர்க் குடித்தல்
சிறுநீர் வடிகுழாய் நோய்க்கு மற்றொரு காரணம் குறைந்த அளவு நீர் அருந்துதல் .  நீங்கள் குறைந்த தண்ணீரைக் குடிக்கையில், உங்கள் உடலிலிருந்து அனைத்து நச்சுகளும் நீக்கப்படாது, இதனால் சிறுநீர் பாதைகளில் வீக்கம் மற்றும் தொற்று ஏற்படுகிறது.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று அறிகுறிகள் என்ன? (Symptoms of urinary tract infection or UTI)
நீங்கள் பின்வரும் அறிகுறிகளில் ஏதாவது அனுபவித்தால், நீங்கள் பெரும்பாலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள் என்று அர்த்தம்.

1. சிறுநீர் கழிக்கும் போது எரிதல்

2. சிறுநீர் கழிக்கும் போது வலி

3. அடிக்கடி சிறுநீர் வருவது போன்ற உணர்வு

4. உடலுறவின் போது வலி

5. கழிவறைக்கு அடிக்கடி போவது

6.சிறுநீரில் சளி அல்லது இரத்தத்தின் தோற்றம்

7.அடி வயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள்

8.துர்நாற்றம் வீசும் அடர்த்தியான சிறுநீர்

9.அதிக அல்லது மிக சிறிய சிறுநீர்

10.காய்ச்சல் மற்றும் குளிர்

11.முதுகு வலி, குமட்டல் மற்றும் வாந்தி

இந்த அறிகுறிகளைக் கொண்டு நீங்கள் உங்கள் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இத்தொற்று பெண்களை அதிகம் தாக்கக் காரணம் என்ன? (Why UTI is common in women?)

இந்தச் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பெண்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் சிறுநீர் வடிகுழாய் ஆண்களை விடப் பெண்களுக்கு சிறியதாக இருப்பதே ஆகும். இதனால் பாக்டீரியா கிருமிகள் எளிதாகச் சிறுநீர்ப் பைக்கு சென்று விடுகின்றன. இரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் இந்த சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றைச் சந்திக்க நேரிடுவதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பநிலை மற்றும் முற்றிய நிலையில் என்ன செய்வது? (What steps are to be  taken at starting and final stages of UTI ?)

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று பாதிப்பு  ஆரம்ப நிலையில் இருக்கும் போது நீங்கள் வீட்டிலேயே சில எளிய வைத்தியங்களை மேற்கொள்ளலாம்.ஆனால் முற்றிய நிலையில் உடனே மருத்துவரை நாட வேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றைக் குணப்படுத்த அண்டிபயோடிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல இயற்கையான வழிகளிலும் இந்த நோய்த்தொற்றைக் குணப்படுத்த முடியும்.இது நோய்த்தொற்றை ஏற்படாமல் தடுக்கவும், மீண்டும் வராமலும் வழி வகை செய்கிறது.சித்த மற்றும் ஆயுர்வேதம் மருத்துவத்திலும் இதற்கு நல்ல தீர்வுகள் உள்ளன. இந்த மருத்துவ முறையில் எந்த உபாதைகளும் ஏற்படாது. மேலும் நீங்கள் விரைவாகக் குணமடையவும் இது உதவும்.

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றிலிருந்து விடுபட  எளிய வீட்டு வைத்திய முறைகள் (Home remedies of UTI in Tamil)

கழிவறையை  உடனடியாகப் பயன்படுத்தவும்

சிறுநீரை அடக்காதீர்கள்.சிறுநீர் வருவது மாதிரி வருவது உணர்வு      ஏற்படும் போது எல்லாம் கழிவறைக்குச் சென்று முழுவதுமாக கழத்துவிடுங்கள்.


சிறுநீர் நீக்க ஊக்கிகளைத் தவிர்க்கவும்

சிறுநீரைத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்கவும்.  இவை காபி, தேநீர், தொகுக்கப்பட்ட பழச்சாறுகள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் மற்றும் மது முதலியன ஆகும்.

உடலுறவிற்கு முன்னும் பின்னும் சுத்தமாக இருங்கள்  

உடலுறவிற்கு முன்னும் பின்னும் நீங்களே சிறுநீர் கழிப்பதையும், சுத்தம் செய்வதையும் ஒரு பொதுவானப் பழக்கமாக  உருவாக்குங்கள்.தொற்று காலத்தில் உடலுறவை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

உயிர்ச்சத்து சி
உங்கள் தினசரி உணவுகளில் உயிர்ச்சத்து சி நிரம்பிய பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக மாம்பழம், கொய்யா,சாத்துக்குடி,ஸ்ட்ராபெர்ரி, கிவி,பூக்கோசு,கொடை மிளகாய் எல்லாம் உயிர்ச்சத்து சி சத்துக்களை நிரம்ப பெற்றுள்ளன.உயிர்ச்சத்து சி உங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது.அதனால் உங்கள் உடல் நோய்த்தொற்றுகளுக்கும், நோய்களுக்கும் உரிய எதிர்ப்பை காட்டத் தொடங்கிவிடும்.

அதிக அளவு தண்ணீர் பருகுதல்

குறைந்தபட்சம் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும்.  அதனால் உங்கள் உடல் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்கிறது.மேலும் முக்கியமாக உடலிலிருந்து அனைத்து நச்சுகள் மற்றும் கழிவுகள் நீக்கப் படுகிறது.நம் உடல் வியர்வை வடிவில் நீரை இழக்கிறது.

சின்ன வெங்காயம்

2 சின்ன வெங்காயம், 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீரில் போட்டு சூடேற்றி, 2 நிமிடம் கொதிவிட்டு இறக்கிவிடுங்கள். இதை வடிகட்டி இளஞ்சூடாக குடிக்கலாம்.இதைத் தொடர்ந்து பருகி வர, நோயிலிருந்து குணமடையலாம்.

பூண்டு

பச்சைப் பூண்டைத் தட்டி உட்கொள்ளலாம்.பூண்டில் உள்ள அலிசின் ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி என்பதால் நோய்த் தொற்று குறைய வாய்ப்புள்ளது.

பார்லி தண்ணீர்

இது ஒரு சிறந்த இயற்கையான சிறுநீர் இறக்கி.இது போதிய சிறுநீர் கழிக்க உதவுவதோடு,உடலின் எலக்ட்ரோலைட் சமன்பாட்டிற்கும் உதவுகிறது.

இஞ்சி தேநீர்

தேநீரில் இஞ்சியைத் தட்டி கொதி வந்தவுடன் வடிகட்டி எடுத்துப் பருகலாம்.இதுவும் இந்தத் தொற்றுக்குச் சிறந்த நிவாரணி.


உளுந்து
4 டீஸ்பூன் உளுந்தை நன்றாகக் கழுவி, ஒரு சொம்பு நீரில் போட்டு 1 மணி நேரம் ஊறவைக்கலாம். பிறகு இந்தத் தண்ணீரை மட்டும் குடித்து வருவது நல்லது.

இனிப்பு குறைவான சாறுகள்

இனிப்பு குறைவான பழச்சாறுகளை அருந்துங்கள். இது போல் நீங்கள் பழச்சாறுகளை அருந்தும் போது சிறுநீர்ப் பாதையில் இருக்கும் நோய்த்தொற்று விரைவாகக் குணமடைய நேரிடுகிறது. அது சிறுநீர்ப் பாதையில் இருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற வழிவகை செய்கிறது.

காரமான உணவுப் பண்டங்கள் வேண்டாம்

காரம் மற்றும் மசாலா அதிகம் இருக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த உணவுகள் மேலும் நோய்த் தொற்றை அதிகப்படுத்தக் கூடும். அதனால் எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

இளநீர் மற்றும் மோர்

இளநீர்,நுங்கு,தயிர் மற்றும் மோர் போன்ற குளிர்ச்சியான பானங்களைக் குடிப்பதால், உடலில் உள்ள சூடு குறையும். மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் சிறுநீர்ப் பாதையில் இருக்கும் நோய்த்தொற்றை விரைவாகக் குறைக்க உதவும்.

எண்ணெய்

அடிவயறில் விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யைப் பூசி, மென்மையாகத் தடவி விடலாம்.

நீர்ச்சத்து நிறைந்த காய் கனிகள்

வெள்ளரி,தர்பூசனி,புடலங்காய்,பீர்க்கங்காய் அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.இது நோயிலிருந்து விடுபட வழி புரியும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

உங்கள் வாழ்க்கை முறைப் பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள். சில சமயங்களில் நம் வாழ்க்கை முறைப் பழக்கங்கள் இத்தகைய நோய்த்தொற்று ஏற்பட ஒரு பெரிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, நீங்கள் உண்ணும் உணவில் மாற்றம், சரியான நேரத்தில் உண்ணாமல் வேலைப் பார்ப்பது, போதிய மற்றும் சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது என்று பல வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்தப் பிரச்சனைக்குக் காரணங்களாகும். முடிந்த வரை இயற்கையோடு சார்ந்த வாழ்க்கையையும், சரியான நேரத்தில் சரியான உணவு, ஓய்வு மற்றும் உறக்கம் என்று உங்கள் வழக்கங்களை மாற்றி அமைப்பதால் நல்ல பலனைப் பெறலாம்.

ஈர ஆடைகளை உடுத்த வேண்டாம்

ஈரமான ஆடைகளை அணியாதீர்கள். குறிப்பாக ஈரமான உள்ளாடைகளை உடனடியாக மாற்றி உலர்ந்த சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள். இது நீங்கள் சுகாதாரத்தோடு இருக்க உதவுவதோடு விரைவாகக் குணமடையவும் உதவும்.

இந்த வீட்டுக் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆகச் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள்,

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் மற்றும்

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றிலிருந்து விடுபட  எளிய வீட்டு வைத்திய முறைகள் என்று அனைத்தையும் விரிவாக அறிந்து பயன் அடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…