மற்ற மொழி அடுத்த மொழி நடிகைகள் தமிழில் வந்து பிரபலமாவது என்பது இப்போது மிகவும் சாதாரணமாக தான் இருக்கிறது. மேலும் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகமாக நடிப்பது கூட மலையாள சினிமாவில் இருந்து வந்த நடிகையாக தான் இருந்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள், இப்போதெல்லாம் பலர் மற்ற மொழி நடிகைகளையே நடிக்க வைக்கிறார்கள்.
ராஸ்மிகா முதன் முதலாக கன்னட மொழியில் வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் பிரபல கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியை முதல் படத்திலேயே நடித்து வந்த வேளையில் காதலில் இருந்தார். முதன் முதலாக இவர்கள் சந்தித்தது கூட இந்த படத்தின் படபிடிப்பு தருவாயில் தானாம்.
மேலும் இவர்கள் சில வருடங்கள் காதலில் இருந்து வந்த வேளையில் இருவரும் 2017ஆம் ஆண்டு திருமணம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். மேலும் அடுத்த ஒரு செம்மையான திரையுலக ஜோடியாக இருப்பார்கள் என்று பலருமே எதிர்பார்த்து வந்த வேளையில் கிட்டத்தட்ட திருமணம் ஆக போகும் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் பிரிந்துவிட்டனர்.
பலருக்குமே இந்த நிகழ்ச்சிர்க்கு பின்னர் ராஷ்மிகா மீது கடுப்பில் மீம்ஸ் போட்டு விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், அப்போது கூட அவரை நிம்மதியாக விடுங்கள், அவள் எந்த தவறும் செய்யவில்லை என ரஷீத் பதிவிட்டிருந்தார்.
மேலும் இவர்கள் இருவருமே பிரிந்து போனதிற்கு காரணமே இருந்தது என்னவென்றால் ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கை தான். சரியாக அவரின் படங்கள் வெற்றி பெற்று அந்த வேளையில் தான் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் எல்லாம் வர தொடங்கி இருந்தன. அதனால் தான் திருமணம் செய்து கொண்டால் அடுத்தடுத்து குடும்ப வாழ்கையை பார்க்க வேண்டி இருக்கும் என்று சினிமா வாழ்க்கை தான் வேண்டும் என்று திருமணத்தையே வேண்டாம் என்று சொல்லி முடிவு பண்ணியிருக்கிறார்.
இதனையும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி புரிந்து கொண்டு அவரின் சினிமா வாழ்க்கைக்கு சப்போர்ட் செய்து திருமணத்தை நிறுத்தி இருக்கின்றார். பலரிடையேயும் ரஷ்மிகா மந்தனா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இணைந்து எடுத்துக்கொண்ட நிச்சையாதார்த்தம் புகைப்படங்கள் வைரளாகி வந்தன.