திருமணம் ஒரு சமூக, சட்ட, உ றவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பா லுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.
திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தணும் என்று கூறுவது வழக்கம். ஆனால், அந்த கல்யாண வாழ்க்கையிலும் ஆயிரம் பொய்கள் நிறைந்திருந்தால், அந்த உறவு எப்படி இருக்கும் என்பது ஒரு கேள்விக்குறிதான்.ஆயிரம் உறவுகள் கூடியிருக்கும் போது தி டீரென்று நின்று போன திருமண காட்சி தான் இது.இணையத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகின்றது.