குழந்தைக்கு வரும் விக்கலை எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள் | Prevent Hiccups in Babies in Tamil

குழந்தைக்கு வரும் விக்கலை எப்படி சரிசெய்வது? தவிர்க்கும் வழிகள்…

ஒருவித ‘ஹிக்’ சத்தம் ஏற்படுவதே ஹிக்கப்ஸ் என்றும் விக்கல் என்றும் சொல்கிறோம். குழந்தைகளுக்கு, பெரியவருக்கு என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்னை. தண்ணீர் குடித்த பின்னும் சில குழந்தைகளுக்கு விக்கல் நிற்காது. அடிக்கடி விக்கல் வருவது சரிதானா? ஏன் வருகிறது? தவிர்க்க வழிகள் உள்ளதா? அனைத்தையும் பார்க்கலாம்.

விக்கல் வருவதற்கு முன் எந்த அறிகுறியும் தெரியாது. இப்போது விக்கல் வரும் என யாராலும் யூகிக்கவும் முடியாது. விக்கல் வருவது இயல்புதான். இது நோயல்ல… பாதிப்பும் அல்ல…

விக்கல் ஏன்?

நாம் ஒரு நேரத்தில் இரண்டு விஷயங்களை ஒன்றாக செய்யும்போது விக்கல் வரலாம்.

சிரித்துக்கொண்டே சாப்பிடுவது.

சிரித்துக்கொண்டே குடிப்பது.

பேசிக்கொண்டே சாப்பிடுவது.

பேசிக்கொண்டே குடிப்பது.

இதுபோல இரண்டு விஷயங்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக நடந்தால் விக்கல் வரலாம்.

Image Source : Bundoo

இதையும் படிக்க: எந்தெந்த உணவுகளால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கு வரும் விக்கல்

குழந்தை தாய்ப்பால் குடிக்கும்போதோ உணவு உண்ணும் போதோ விக்கல் வரலாம்.

தும்மல், அழுகை, ஆழ்ந்த மூச்சி விடும்போது விக்கல் வருவது இயல்பு. இதுபோல் குழந்தைகளுக்கு அடிக்கடி வரும்.

மிகவும் அரிதாக, உடல்நல பிரச்னைகளால் விக்கல் வரக்கூடும்.

விக்கல் வந்தால் ஆபத்து. பயப்பட கூடிய விஷயம் என்று இல்லை.

விக்கல் வந்தால் அவசர சிகிச்சை தேவை என்பதெல்லாம் கிடையாது. அது இயல்பான ஒரு விஷயம்தான்.

ஒரு சிலருக்கு மிகவும் அரிதாக சில பிரச்னைகளை விக்கல் ஏற்படுத்தலாம். அவர்களுக்கு விக்கல் மாதம் முழுக்க வந்தால் என்ன பிரச்னை எனப் பார்க்க வேண்டும். இதுபோல் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.

இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

விக்கல் எப்படி வருகிறது?

டயாப்ராகம் திடீரென இறுக்கமாவதாலோ, நுரையீரலின் அடிப்பகுதி ஆழ்ந்த மூச்சு விடும்போது காற்றை அதிகமாக எடுப்பதாலோ விக்கல் வருகிறது.

தசை இறுக்கமாகி நகரும்போது, எபிகிளாடிஸ் எனும் பைப் வழியாக உணவோ தண்ணீரோ நுரையீரலின் கீழ் நோக்கி செல்கையில் இந்த காற்றோட்ட பாதை மூடி கொள்கையில் விக்கல் சத்தம் ஏற்படுகிறது.

சுருக்கமாக சொன்னால், அதிகமான காற்றை நாம் விழுங்கிவிடுவதால் ஏற்படும் ஒரு ரியாக்‌ஷனே விக்கல்.

குழந்தைகளுக்கு வரக்கூடிய விக்கல் மிகவும் பொதுவானது. பயம் கொள்ள தேவையில்லை.

உணவும் உண்ணும் போதோ உணவு உண்ட பின்போ ஏற்படுவது சகஜம்.

குழந்தைகள் தங்களை அறியாமலே அதிக காற்றை உணவு உண்ணும் போதும் பால் அருந்தும்போதும் காற்றை விழுங்கி விடுகின்றனர். வயிற்றில் உள்ள வாயு (காற்று) விக்கலை ஏற்படுத்துகிறது.

இதையும் படிக்க: குழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்… தீர்வு என்ன?

விக்கலைத் தவிர்க்க முடியுமா?

இந்த விக்கல் ஒரு நோய் அல்ல. இதைப் பார்த்து கவலைப்பட வேண்டாம். சின்ன சின்ன முயற்சிகளை பாதுகாப்பாக மேற்கொண்டால் விக்கல் குழந்தைகளுக்கு ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

தாய்ப்பால் தரும்போது குழந்தையை உங்கள் தோள்ப்பட்டை அருகில் சரியான நிலையில் தூக்கி வைத்துக் கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம்.

Image Source : Creative mama

இதையும் படிக்க: குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

குழந்தையை சரியான நிலையில் தூக்கி வைத்து தாய்ப்பால் அருந்தும்படி செய்தால், தேவையில்லாமல் காற்று குழந்தையின் வாயின் வழியாக செல்வது தடுக்கப்படும். இதனால் விக்கல் வருவதும் தடுக்கப்படும்.

குழந்தைக்கு தரும் ஃபீடிங் பாட்டிலில் பெரிய துளை இருந்தாலும் அதன் வழியாக அதிக காற்று சென்று குழந்தைக்கு விக்கல் ஏற்படலாம்.

குழந்தையின் ஃபீடிங் பாட்டில் சொட்டு சொட்டாக வரும் படி இருக்கவேண்டும். அப்படியே தொடர்ந்து பால், தண்ணீர் வெளியேறும்படி பெரிதாக இருக்க கூடாது.

சிலர் விக்கல் வரும்போது தாய்ப்பால் கொடுக்காதீர்கள் என்பார்கள். ஆனால், அது தவறு. விக்கல் வந்தாலும் குழந்தைக்கு நீங்கள் தாய்ப்பால் ஊட்டலாம்.

கொதிக்கின்ற நீரில் ½ டீஸ்பூன் சோம்பை போட்டு, அந்த தண்ணீரை இளஞ்சூடாக 2-3 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்க விக்கல் நிற்கும். உடனடியாக விக்கலை நிறுத்தும் வைத்தியம் இது.

முதல் சில மாதங்களுக்கு குழந்தைக்கு அடிக்கடி விக்கல் வருகிறது என்றால் நீங்கள் அதிகமாக தாய்ப்பால் கொடுக்கிறீர்களா என சிந்தித்து பாருங்கள்.

குழந்தைக்கு சரியான இடைவேளியில் சரியான அளவுக்கு தாய்ப்பால் கொடுப்பதே நல்லது.

அதிகமாக உணவோ தாய்ப்பாலோ கொடுப்பதாக நீங்கள் எண்ணினால் குழந்தையின் தேவை அறிந்து உணவு கொடுங்கள்.

குழந்தையை கட்டாயப்படுத்தி உணவைத் திணிக்க வேண்டாம்.

குழந்தையின் வயிறு வலி, வாயு பிடிப்பு போன்றவற்றுக்கு ஓம தண்ணீரை சிறிதளவு கொடுக்கலாம்.. இந்த வைத்தியம் குழந்தையின் வயிற்றில் உள்ள வாயு பிரச்னையை சரியாக்கும். வயிற்று பிடிப்புகூட சரியாகும். விக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இதையும் படிக்க: குழந்தைகளின் கண்களில் மை வைக்கும் முறை சரியா? தீர்வு என்ன?

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…