நடிகை நயன்தாரா விரைவில் பாலிவுட் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார். அட்லீ இயக்கத்தில் ஷா ரு க் கா ன் நடிக்கும் புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருந்ததை நாம் அறிவோம். ஆனால், ஷா ரு க் கா ன் தற்போது தனது மகன் ஆ ர் ய ன் கா ன் போ தை பொருள் வழக்கில் சி க் கி இருப்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம்.
மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு நின்றுபோனதன் காரணமாக, மற்ற படங்களுக்கு கொடுத்த தேதி சி க் க ல் ஆகும் என்று, நயன்தாரா இப்படத்தில் இருந்து விலகியுள்ளாராம். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதை நாம் அறிவோம். தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதை கூட பல நாட்கள் கழித்து பேட்டி ஒன்றில் தான் கூறினார் நயன்தாரா.
இந்நிலையில், நடிகை நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த வருடத்தின் இறுதிக்குள் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தேதி சி க் க ல் காரணமாக இருந்தாலும், திருமணம் எனும் முக்கிய காரணத்தினால் தான், ஷா ரு க் கா ன் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளார் என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இதில் எது உண்மை என்று நயன்தாரா தரப்பில் இருந்து கூறினால் மட்டுமே அனைவருக்கும் வெளிச்சமாகும்.