குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன? | Nail Biting in Children in Tamil

குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன?

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள்கூட நகம் கடிக்கும் பழக்கத்துடன் இருக்கின்றனர். எதாவது பிரச்னை வந்தாலும் போர் அடித்தாலும் நகம் கடிக்கத் தொடங்குவர். நகம் கடிப்பது என்பது பொதுவான பிரச்னை, இந்தப் பழக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரும். புதிய சூழல் மாறும்போது, இயல்பற்ற சூழல் வரும்போது கூட நகம் கடிக்கலாம்.

இப்படி நகம் கடிப்பதால், அவர்களுக்கு உண்டான ஸ்ட்ரெஸ், கவலை, வியப்பு ஆகியவற்றை சமாளிக்க உதவுவதாக எண்ணுகின்றனர். இந்தப் பழக்கம் மிகவும் மோசமான முறையில் நீடித்தால், நீங்கள் நிச்சயம் கவனிக்க வேண்டும்.

காரணிகள்

குழந்தைகளுக்கு பெரியவர்களைவிட அதிக அளவில் போர் அடிக்கும். சொல்ல போனால் மிக விரைவிலே போர் அடிக்கும். ஏதாவது ஒன்றை புதிதாக தேடி கொண்டே இருப்பார்கள். புதிதாக ஒரு விஷயத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.

இந்த விஷயங்கள் அவர்களை நகம் கடிக்கும் பழக்கத்திற்கு அழைத்து செல்லும். இதனால் நகம் கடிக்கும் பழக்கம் வந்தால், அதைக் கண்டு நீங்கள் அஞ்ச தேவையில்லை.

குழந்தைகளுக்கு எதாவது பதற்றமான சூழல் ஏற்பட்டால் அப்போது அந்த பதற்றத்தை சமாளிக்க நகம் கடிப்பது, பற்களை நறநறவென தேய்ப்பது போன்ற பழக்கங்களைத் தாங்களாக உருவாக்கி கொள்ளலாம்.

குழந்தைகள் முதல் முறையாக பள்ளிக்கு செல்லும் முன், அவர்களின் பயத்தைப் போக்கி கொள்ள நகம் கடிக்கும் பழக்கம் ஏற்படலாம்.

சின்ன சின்ன டென்ஷன்களுக்காக, குழந்தைகள் நகம் கடித்தால் நீங்கள் அதைக் கண்டு பயப்பட தேவையில்லை.

நகம் கடிப்பதால் என்னென்ன விளைவுகள் வரும்?

பிளிடீங்

நகம் கடிப்பதால் நகத்தின் ஓரம் சிவப்பாக மாறலாம். வீக்கம் அடையலாம். வலிக்கவும் செய்யலாம். அதிகமாக கடித்து இருந்தால், ரத்தமும் வரலாம்.

Image Source : She Knows

இதையும் படிக்க: குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

தொற்று

நகத்தில் உள்ள கிருமி, அழுக்கு வாய் வழியாக குழந்தையின் வயிற்றுக்குள் செல்லும். தொற்று நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

கிருமிகளும் வாயின் வழியாக செல்லும்.

நகத்தின் தோற்றம்

நகத்தைக் கடித்து கொண்டே இருப்பதால் நகத்தின் தோற்றமும் மாறக்கூடும்.

ஒன்றும் பாதியுமாக நகங்கள் காணப்படும்.

பற்களில் சொத்தை

உடைந்த நகங்களை கடிப்பதால் பற்களின் இடுக்கில் நகம் மாட்டி கொள்ளலாம்.

பற்களில் சொத்தைகூட வரலாம். கிருமிகள் பரவி சொத்தை பற்கள் உருவாகும்.

கியூட்டிகள் பைட்டிங்

நகத்தின் மேல் உள்ள கியூட்டிகள் பாதிக்கப்படும்.

இதனால் ரத்தமும் வரலாம். வலியும் வரும்.

மனரீதியாக பிரச்னை

கவலை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கான ஓர் அறிகுறி என்றும் சொல்லலாம்.

தன்னம்பிக்கையை கெடுத்துவிடும். சங்கடமான நிலைக்கு தள்ளும்.

இதையும் படிக்க: குழந்தையை இந்த இடங்களில் அடிக்கவே கூடாது… ஏன்?

தீர்வுகள் என்னென்ன?

கவனத்தை மாற்றுவது

டிவி பார்க்கும்போது குழந்தை, நகங்களைக் கடித்தால் டிவி பார்ப்பதைத் தடுத்து குழந்தையின் கவனத்தை விளையாட்டு பக்கம் திருப்பலாம்.

விளையாட்டு பொருட்களைக் கொடுத்து, அவர்களின் கவனத்தை மாற்றுங்கள்.

இதனால் நகம் கடிக்கும் பழக்கத்தைத் தடுக்கலாம்.

அதிகமாக ரியாக்ட் செய்ய வேண்டாம்

குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கத்தைப் பார்த்து அதிகமாகத் திட்டுவதோ சத்தமிடுவதோ செய்யாதீர்கள்.

அவர்களின் நகத்தில் அவர்களையே நெயில் பாலிஷ் போட சொல்லி வலியுறுத்தலாம்.

குழந்தைகளுக்கு எப்போது அட்டன்ஷன் தேவைப்படும். அது நெகடிவ் அல்லது பாசிடிவ்வாக இருக்கலாம். அதனால் அவர்களுக்கு ஏற்ற வழியில் திருத்த முயற்சிப்பதே நல்லது.

ஆலோசகரின் வழிகாட்டுதல்

குழந்தை நல மருத்துவர் அல்லது மனநல மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கலாம்.

குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்றால், குழந்தையின் மனநிலையை அறிவார்கள்.

நகம் கடிக்கும் காரணத்தையும் சொல்வார்கள்.

Image Source : Only My Health

இதையும் படிக்க: சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

நகம் கடிக்காதது போல செய்வது

நகத்தை அடிக்கடி கட் செய்தால் நகம் கடிக்க வேண்டும் என்ற உணர்வு வராது.

நகத்தை சுத்தம் செய்யும் பிரஷ் வந்துவிட்டது. அவற்றைக் கொண்டு நகங்களை சுத்தமாகப் பராமரியுங்கள்.

கசப்பான சுவையை நகத்தில் பூசி விடுங்கள். இதனாலும் நகம் கடிக்கும் பழக்கம் தடுக்கப்படும். இதற்கு மருத்துவரின் ஆலோசனை கேளுங்கள்.

குழந்தைக்கு புரிய வையுங்கள்

நகம் கடிப்பதால் வரக்கூடிய பிரச்னைகளை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லுங்கள்.

அமைதியான, ரகசியமான நினைவுப்படுத்தலை அடிக்கடி சொல்லுங்கள். நகம் கடிக்க வேண்டாம் என்று.

குழந்தை நகம் கடிக்கும் போதெல்லாம் அறிவுரை சொல்லுங்கள்.

பொறுமை அவசியம்

குழந்தையை அடிக்க கூடாது.

கடுமையான கண்டிப்பும் கூடாது.

சில குழந்தைகளுக்கு தாங்கள் நகம் கடிக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கலாம். அதனால் அவர்களை அடிக்க கூடாது.

தண்டனைத் தருவது, கேலி செய்வது கூடாது.

குழந்தைகளின் உண்மையான பிரச்னையைக் கண்டறியுங்கள்.

குழந்தையை பாராட்டுங்கள்

நகம் கடிக்காத நேரத்தில், நீ நகம் கடிக்கவில்லை … நல்ல குழந்தை எனப் பாராட்டுங்கள்.

சின்ன சின்ன பரிசுகளைக் கொடுக்கலாம்.

பாசிடிவ் அணுகுமுறையால் குழந்தைகளைத் திருத்த முடியும்.

இதையும் படிக்க: குழந்தைகள் முன் பெற்றோர் உடை மாற்றலாமா?

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…