தமிழ் சினிமாவின் இன்று எத்தனையோ நட்சத்திரங்கள் இருந்தாலும் வாரிசு நடிகர்களாக இல்லாமல் தனது முழு திறைமையை மட்டுமே வைத்து உயர்ந்த நடிகர்கள் என்று சொன்னால் அது ஒரு சில மட்டுமே. அதற்காக இந்த வாரிசு நடிகர்கள் மட்டும் தமிழ் சினிமாவில் எளிதில் வெற்றி பெற்று விட்டார்கள்.
என்பதல்ல மற்ற மொழிகளில் எப்படியோ ஆனால் தமிழ் சினிமாவில் நல்ல நடிப்பும் திறமையும் இருந்தால் மட்டுமே மக்களின் மனதில் எளிதில் இடம் பிடிக்கும் என்பது தான் உண்மை. இப்படி தமிழ் சினிமாவில் மற்றவர்களைப் போல அல்லாமல் தனி ஒரு ஆளாக எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மக்களிடையே இன்று அல்டிமேட் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் தல அஜித் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி அமராவாதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினமாவிற்கு நுழைந்த இவருக்கு ஆரம்ப கால திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை என்று சொன்னாலும் போக போக பல படங்களில் நடிக்க தொடங்கினார். இப்படி இவர் நடிப்பில் அடுத்து வெளி வந்த ஆசை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்துபட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தற்போது தமிழ் சினிமாவின் தவர்க்க முடியாத ஆக்சன் ஹீரோவாக வளர்ந்துள்ளார். இப்படி தல அஜித் தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவூட் ஹாலிவூட் என பல திரைப்பட பிரபலங்களுக்கும் இவரை தெரியும் அளவுக்கு புகழ் பெற்றவர் நம் தல அஜித். அஜித் படங்களில் நடிப்பதை தாண்டி மேகரா முன் தோன்றுவதை முற்றிலும் தவிர்ப்பார்.
அவ்வளவு எளிதாக அவரை வெளியே காண முடியாது. அவர் குடும்பத்தில் இருப்பவர்களும் அப்படி தான். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது. தல மகன் ஆத்விக் ஷாலினியுடன் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். அங்கு எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.