குழந்தைகளின் துணிகளை இப்படி பராமரித்தால் கிருமிகள் தாக்காது..! 21 வழிகள் | Old Baby Cloths in Tamil

குழந்தைகளின் துணிகளை இப்படி பராமரித்தால் கிருமிகள் தாக்காது..! 21 வழிகள்

குழந்தைகள் உள்ள வீடு மகிழ்ச்சியாக இருக்கும். அனைவரும் குழந்தைக்கு எது பெஸ்டோ அதைத் தர வேண்டும் என நினைப்பீர்கள். குழந்தைகளுக்கு சரும பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்க குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் முக்கியம். அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

குழந்தையின் துணிகளை முறையாக துவைத்து, பராமரிப்பதும் முக்கியம்.

குழந்தையின் சருமத்தில் நேரடியாக படும் துணியை மிக கவனத்துடன் பராமரிக்க வேண்டும்.

கிருமிகள் இல்லாத துணியாக இருப்பின், குழந்தைக்கு கிருமி தாக்குதல், சரும பிரச்னைகள் போன்றவை பெரிதும் தாக்காமல் தடுக்கலாம்.

சுத்தமான, கிருமிகள் இல்லாத, மிருதுவான, தளர்வான ஆடைகள் குழந்தைக்கு ஏற்றது.

குழந்தையின் துணிகளை பராமரிக்க 21 வழிகள்…

புதிய ஆடைகளை குழந்தைக்கு அணிவிப்பதற்கு முன் கட்டாயம் துவைத்துவிட்டு குழந்தைகளுக்கு அணிவிப்பதுதான் சரி.

துவைக்காத புத்தம் புதிய ஆடையோ துவைக்காத ஆடையோ குழந்தைக்கு அணிவித்தால் பிரச்னை ஆரம்பிக்கும். சரும பிரச்னைகள் வரலாம்.

துணியில் உள்ள தூசு, ஸ்டார்ச், கெமிக்கல்கள், துணியை தயாரிக்க பயன்படுத்தும் நிறங்கள் ஆகியவற்றால் பாதிப்பு வரும்.

இதையும் படிக்க: குழந்தைகளின் முடியைப் பராமரிக்க 13 வழிகள்…

குழந்தை துணிகளுக்கு என பிரத்யேக டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. குடும்பத்தில் அனைவருக்கும் பயன்படுத்த கூடிய அதே டிடர்ஜென்ட் பயன்படுத்தினாலே போதும்.

குழந்தைகளின் துணியில் நீங்காத கறை படிந்துவிட்டால், அதை துவைப்பதற்கு முன் அந்த கறையை நீக்கி விட்டு குழந்தையின் துணியை துவைப்பது நல்லது. இதனால் துணியும் புதிதாகவே இருக்கும்.

அடர்நிற உணவுகள், டயாப்பர் மாற்றும்போது ஏற்படும் கறையை உடனே ஊறவைத்து நீக்கிவிட்டு பின் துவைப்பதால் கறையும் கிருமிகளும் முற்றிலும் நீங்கும்.

ஃபாப்ரிக் சாஃப்ட்னர் பயன்படுத்துவதால் குழந்தையின் துணி சாஃப்டாகவே இருக்க பயன்படும். இதனால் குழந்தைக்கும் சௌகரியமாக இருக்கும்.

குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம்.

பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.

1 – 2 துளிகள் கிருமி நீக்கும் திரவங்களை துவைக்கயில் பயன்படுத்தலாம்.

குழந்தையின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும்.

வீட்டுக்குள்ளே குழந்தையின் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.

இதையும் படிக்க: 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?

சூரிய வெளிச்சம் மற்றும் சுத்தமான காற்றும் குழந்தைகளின் துணியில் பட வேண்டும் என்பதால் வெயில் வரும் இடங்களில் துணியை உலர்த்த வேண்டியது அவசியம்.

குழந்தையின் துணியை துவைப்பதற்கு முன் இளஞ்சூடான தண்ணீரில் துணிகளை ஊறவைக்க வேண்டியது அவசியம். இதனால் தூசு, கிருமிகள் ஆகியவை எளிதில் நீங்க உதவும்.

தனியாக துவைத்த குழந்தைகளின் துணிகளை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டியதும் முக்கியம்.

அடுத்த முறை குழந்தைக்கு துணியை அணிவிக்க ஏற்றதுபோல சுத்தமான முறையில் இருப்பது நல்லது.

வெயில் இல்லாத மழை, பனி காலங்களில் குழந்தையின் துணிகளை அயன் செய்து, அந்த சூடு ஆறிய பின் குழந்தைக்கு அணிவிக்கலாம். இதனால் துணியின் ஈரமும் அயன் செய்யும் சூட்டால் நீங்கும்.

மழை காலத்தில் குழந்தையின் துணியை சுத்தமாக பராமரிக்க, கிருமிகளை நீக்க அயன் செய்வது சிறந்த வழி.

முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணியால் தயாரிக்கப்பட்ட உடைகளை மட்டுமே அணிவிப்பது நல்லது.

குழந்தையின் துணியை துவைத்து முடித்த பின் இறுதியாக கிருமி நீக்கும் திரவங்களை தெளித்த நீரில் அலசுவது நல்லது.

லேஸ் உள்ள துணிகளை கைக்குழந்தைகள், மழலைகள் ஆகியோருக்கு தவிர்த்து விடுங்கள். அவர்களது சின்ன விரல்கள் உள்ளே மாட்டிக் கொள்ளலாம்.

இதையும் படிக்க: டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…