குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ் | Baby Sleep Tips in Tamil

குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தைகளின் உடல் மொழியை எப்படி புரிந்து கொள்வது?

குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும்.

தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும்.

பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும்.

பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

எப்போது குழந்தைகளை படுக்க வைக்கலாம்?

இதையும் படிக்க: குழந்தைகளைத் தூங்க வைப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள் 

பால் குடித்த உடனே உணவு உண்ட உடனேயே குழந்தைகளை தூங்க வைக்க கூடாது.

அப்படி தூங்க வைத்தால் புரை ஏறலாம். மூச்சு பாதையில் அடைப்பு ஏற்படலாம்.

சில குழந்தைகளின் வாயில் பால் இருந்தபடியே தூங்கிவிடும். எனவே, பாலை குழந்தையை விழுங்க செய்த பின் லேசாக முதுகில் சிறிது நேரம் தட்டலாம்.

சிறு குழந்தைகளை தோளில் போட்டு குழந்தையின் முதுகில் தட்ட வைத்து ஏப்பம் வந்த பின் தூங்க வைக்கலாம்.

பெரிய குழந்தைகளையும் சிறிது நேரம் முதுகிலே தட்டிவிட்ட பின் தூங்க அனுமதிக்கலாம்.

தடுப்பு மருந்துகள், சொட்டு மருந்துகள் கொடுத்த பின் உடனே தூங்க வைக்க கூடாது.

குழந்தைகள் முன் இதெல்லாம் கவனிக்க வேண்டும்?

மொபைல் போன், டிவி, ரேடியோ, லாப் டாப், அதிக வெளிச்சம் உள்ள லைட், பெற்றோரின் குறட்டை சத்தம், சத்தமாக பேசுதல் போன்றவை இருக்க கூடாது.

இதெல்லாம் குழந்தைகளின் தூக்கத்தை கெடுத்துவிடும்.

இதையும் படிக்க: ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

குழந்தைக்கு தூக்கம் வருவதை எப்படி கண்டறிவது?

  • மூக்கு, கண்களை கைகளால் குழந்தை தேய்க்க ஆரம்பிக்கும்.
  • உட்காராமல் சாய்ந்து கொள்ளும்.
  • நடவடிக்கைகள் மெதுவாக காணப்படும்.
  • தூக்கம் வருவதன் அறிகுறியாக சில வித்தியாச ஒலிகளையும் எழுப்பலாம்.
  • கைகள் அல்லது எதாவது பொருளை சப்பத் தொடங்கும்.

இந்த மாதிரி அறிகுறிகள் தென்பட்டவுடன் தொட்டலிலோ மெத்தையிலோ மடியிலோ போட்டு லேசாக தட்டி கொடுத்தால் போதும். குழந்தை தூங்கி விடும்.

தூங்க வைக்க சில டிப்ஸ்

  • இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.
  • தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.
  • வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.
  • குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.
  • சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.
  • மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.
  • குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.
  • ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.

இதையும் படிக்க: உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா? அறிகுறிகள் என்னென்ன?

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…