3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி? | 3 Homemade Baby Massage Oils in Tamil

3 வகையான பேபி மசாஜ் எண்ணெய் செய்வது எப்படி?

குழந்தைகளைப் பராமரிப்பதில் பெற்றோர்கள் சில தவறுகள் செய்வார்கள். கடையில் விற்கும் மசாஜ் எண்ணெய்கள் விலையும் அதிகம். அதனுடன் கெமிக்கல்களும் கலந்து பதப்படுத்தி விற்கப்படுகின்றன. இதைத் தவிர்ப்பதே புத்திசாலித்தனம். வீட்டிலே எளிதில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே குழந்தைகளுக்கு தேவையான மசாஜ் எண்ணெயை (Homemade Baby Massage Oil) செய்யலாம்.

இந்தப் பதிவில் 3 விதமான பேபி மசாஜ் எண்ணெயின் செய்முறைகள் விளக்கப்பட்டிருக்கும். ஒவ்வொன்றுமே அற்புதமான பலன்களைத் தரும்.

0 – 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, இவற்றைப் பயன்படுத்தலாம்.

3 விதமான பேபி மசாஜ் எண்ணெய்கள்

#1. அரோமா பேபி மசாஜ் எண்ணெய்

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 2 டேபிள் ஸ்பூன் அல்லது உலர்ந்த ரோஜா இதழ்கள் – 2 டேபிள் ஸ்பூன்
  • குங்கமப்பூ – ஒரு சிட்டிகை
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • சந்தனத்தூள் – 1 சிட்டிகை (விருப்பப்பட்டால்)

செய்முறை

  • பாத்திரத்தில் மேற்சொன்ன 3 எண்ணெய் வகைகளையும் ஒன்றாக சேர்த்து, லேசான தீயில் வைத்து இளஞ்சூடாக்கவும்.
  • இதில், ரோஸ் வாட்டர், குங்கமப்பூ, மஞ்சள் தூள், சந்தனத்தூள் சேர்த்து கலக்கவும். 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிடவும்.
  • இந்தப் பாத்திரத்தை ஒரு ஓரமாக, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
  • 12 மணி நேரம் கழித்து, இந்தப் பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து இளஞ்சூடாக்க வேண்டும்.
  • மீண்டும் அடுப்பை அணைத்துவிடவும். மீண்டும் அதுபோல ஓரமாக எடுத்து வைத்து இந்த எண்ணெயைப் பாதுகாக்கவும்.
  • இதுபோல 4 முறை இளஞ்சூடாக்கி, 12 மணி நேரம் அப்படியே விட்டுவிடவும்.
  • நான்காவது முறை இளஞ்சூடாக்கிய பிறகு, எண்ணெய் ஆறியதும் வடிகட்டிக் கொள்ளலாம்.
  • இந்த எண்ணெயை கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

குறிப்பு

  • இந்த எண்ணெயை 2 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து குழந்தைகளைக் குளிக்க வைக்கலாம்.
  • 0-5 வயது குழந்தைகளுக்கு ஏற்றது.

இதையும் படிக்க : குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

#2. பளிச் சருமத்தைக் கொடுக்கும் பேபி மசாஜ் எண்ணெய்

தேவையானவை

  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • கொதிக்க வைக்காத பால் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • ஒரு பவுலில் இதை மூன்றையும் பவுலில் சேர்த்து, நன்றாக ஸ்பூனால் கலக்கவும்.
  • இதை பஞ்சால் நனைத்து குழந்தையின் உடல் முழுவதும் பூச வேண்டும்.
  • லேசாக மசாஜ் செய்த பிறகு, 20 நிமிடங்கள் கழித்து குளிக்க வைக்கலாம்.
  • 0-5 வயது குழந்தைகள் வரை, இந்த மசாஜ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

குறிப்பு

  • தேவைப்படும் போதெல்லாம் ஃப்ரெஷ்ஷாக செய்து கொள்ளலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்து குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.
  • 0-5 வயது குழந்தைகளுக்கு ஏற்றது.

இதையும் படிக்க : குழந்தைகளின் முடியைப் பராமரிக்க 13 வழிகள்

#3. ஃப்ரெஷ் லெமன் பேபி மசாஜ் எண்ணெய்

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • விளக்கெண்ணெய் – ½ டேபிள் ஸ்பூன்
  • பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  • ஃப்ரெஷ் எலுமிச்சைத் தோல் பொடி – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை (பெண் குழந்தைக்கு 2 சிட்டிகை)
  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு கண்ணாடி பவுலில் 3 எண்ணெய்களையும் போட்டு கலக்கவும்.
  • ஃபிரெஷ்ஷான எலுமிச்சை தோலை, பொடியாகப் பொடித்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் அளவுக்கு, இந்த பொடியை எண்ணெயில் போட்டு கலக்கவும்.
  • மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து நன்றாக ஸ்பூனால் கலக்கவும். அவ்வளவுதான்.
  • இயற்கையான ஹோம்மேட் பேபி மசாஜ் எண்ணெய் ரெடி.

இதையும் படிக்க : ஹோம்மேட் ஓட்ஸ் மீல் சோப் தயாரிப்பது எப்படி? 

குறிப்பு

  • இந்த எண்ணெயை 7 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
  • தேவைப்படும்போதெல்லாம் ஃப்ரெஷ்ஷாக செய்து கொள்வது மிக மிக நல்லது.
  • எலுமிச்சை தோல் இல்லையெனில் ஆரஞ்சு பழத்தோலைகூட சேர்க்கலாம்.
  • எலுமிச்சை, ஆரஞ்சு தோல் கிடைக்காதவர்கள், ஒரு சொட்டு சிட்ரஸ் எசன்ஷியல் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
  • 20 நிமிடங்கள் கழித்துக் குழந்தைகளை குளிக்க வைக்கலாம்.
  • 0-5 வயது குழந்தைகளுக்கு ஏற்றது.

பலன்கள்

  • குழந்தையின் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • சரும தொல்லைகள் எதுவும் வராது.
  • குளிர், வெயில், பனி காலம் போன்ற எந்தக் காலத்தில் சருமம் நன்றாக இருக்கும்.
  • மிருதுவான சருமமாக மாறும்.
  • தொற்றுகளின் தாக்கம் தடுக்கப்படும். ஏனெனில் இதில் மஞ்சள், தேன் போன்றவை சேர்க்கப்படுகின்றன.
  • நல்ல நறுமணமாகவும் இருக்கும்.
  • தோலுக்குத் தேவையான சத்துகளும் கிடைக்கும்.
  • சருமத்தில் சரியான ஈரப்பதம் பராமரிக்கப்படும்.

இதையும் படிக்க : 5 நிமிடங்களில் 2 விதமான ஹோம்மேட் பேபி ஷாம்பு செய்வது எப்படி?

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…