கசப்பு இல்லாத 5 இனிப்பான சிரப்பால் தீரும் மலச்சிக்கல் பிரச்னை…

மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் ஆரம்பம். இந்த பிரச்னை நீங்கிவிட்டாலே உடலில் பாதி பிரச்னை தீர்ந்துவிடும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கீழே சொல்லப்பட்டுள்ள தீர்வுகள் உடனடி தீர்வைக் கொடுக்கும். ஒரு வாரத்தில் பெரியளவு மாற்றத்தை உணர முடியும்.

இங்கு சொல்லப்படும் எல்லாத் தீர்வுகளும் இனிப்பான விஷயம் என்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல், விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

5 ஸ்வீட் தீர்வுகள்… மலச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வாகும்

#1. ரோஜா குல்கந்து

Image Source : NDTV Food

மலச்சிக்கல் முற்றிலுமாக நீங்கும்.

சருமம் அழகு பெறும்.

பருக்கள் வராது.

வெள்ளைப்படுதல் பிரச்னை முழுமையாக நீங்கிவிடும்.

வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்கும்.

மலமிலக்கியாக செயல்படும்.

தேவையானவை

உலர்ந்த ரோஜா இதழ்கள் – 6 பூ

பாலிஷ் சேர்க்காத சர்க்கரை – 3-4 டேபிள் ஸ்பூன்

தேன் – ¼ கப்

வெள்ளரி விதை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மிக்ஸியில் சர்க்கரை, ரோஜா இதழ் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

அதைக் கண்ணாடி ஜாரில் போட்டு கொள்ளவும்.

வெள்ளரி விதையையும் இதிலே சேர்க்கவும்.

ஸ்பூனால் நன்கு கலக்கவும்.

இதில் தேன் ஊற்றி நன்கு கலக்கவும்

48 மணி நேரம் மூடி போட்டு அப்படியே விட்டுவிடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான ரோஜா குல்கந்து ரெடி.

ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போது, நன்கு கலக்கி அடியிலிருந்து எடுத்து சாப்பிடலாம்.

குறிப்பு:

உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்தினால் குல்கந்து கெடவே கெடாது.

பெரியவர்கள் தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.

1 வயது + குழந்தைகள், தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

இதையும் படிக்க: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

Image Source : Natural Health 365

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

#2. திரிபலா குடிநீர்

இரவில் இதைக் குடித்து வந்தால், மலச்சிக்கல் முழுமையாக நீங்கிவிடும்.

பல் ஈறுகளில் ரத்தம் வழியாது.

வயிறு, குடல் சுத்தமாகும்.

மலமிலக்கியாக செயல்படும்.

நோய் எதிர்ப்பு சக்தி தரும்.

உடலை வஜ்ஜிரமாக மாற்றும் தன்மை உண்டு.

நோய்களை விரட்டி அடிக்கும் அரணாக மாறும்.

அனைத்துத் தலைவலி பிரச்னையும் தீரும்.

வாயு பிரச்னையும் நீங்கும்.

தேவையானவை

திரிபலா பொடி – 1 டீஸ்பூன்

கருப்பட்டி – 1 டீஸ்பூன்

திரிபலா பொடியை வீட்டிலே செய்யலாம்.

நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் உலர்ந்தது – சம அளவில் எடுத்து இடித்து, பொடித்து பவுடராக வைத்துக்கொள்ளவும். இதை மூன்றையும் காற்று புகாத டப்பாவில் சேமிக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் கடையில் திரிபலா பொடியை வாங்கி கொள்ளுங்கள்.

செய்முறை

ஒரு டம்ளரில் இளஞ்சூடான நீர் இருக்க வேண்டும்.

அதில் ஒரு டீஸ்பூன் அளவு திரிபலா பொடி சேர்த்துக் கலக்கவும்.

அவ்வளவுதான் திரிபலா குடிநீர் தயார்.

குழந்தைக்கு இனிப்பு சேர்த்துக் கொள்ளவும்.

அதை இரவில் நாள்தோறும் குடித்து வரவேண்டும்.

குறிப்பு:

பெரியவர்கள் இனிப்பு சேர்க்காமலே குடிக்கலாம்.

1 வயது + குழந்தைகளுக்கு இனிப்பு சேர்க்கலாம்.

மலம் கருப்பாக வந்தால் பயப்பட வேண்டாம்.

இதையும் படிக்க: 0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

Image Source : Alfoah

#3. உலர் திராட்சை ஸ்வீட் சிரப்

மலச்சிக்கல் உடனடியாக நீங்கும்.

ஒற்றைத் தலைவலி நீங்கும்.

ரத்தசோகை நோய் சரியாகும்.

ஊட்டச்சத்துகள் நிறைந்த சிரப் இது.

உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

தேவையானவை

கருப்பு உலர் திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்

பேரீச்சை – 3

செய்முறை

அரை டம்ளர் நீரில் உலர் திராட்சையும், கொட்டை நீக்கிய பேரீச்சையை போட்டு ஊற வைக்கவும்.

மறுநாள் இவற்றை அப்படியே மிக்ஸியில் அரைக்கவும்.

நீர்த்த தன்மையில் லேகியம் போல வரும். அதை அப்படியே குடித்து விடுங்கள்.

வெறும் வயிற்றில் குடிப்பது பெஸ்ட். மற்ற நேரங்களிலும் சாப்பிடலாம்.

குறிப்பு:

பெரியவர்கள், 8 + மாத குழந்தைகளுக்கு ஏற்றது.

இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

Image Source : Exporters India

#4. கற்றாழை சிரப்

மலச்சிக்கல் நீங்கும்.

அனைத்து வித கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.

கர்ப்பப்பை கட்டி கூட கரையும்.

சருமத்தின் நிறம் கூடும்.

சீரான சருமம் கிடைக்கும்.

தேவையானவை

கற்றாழை – 1 மடல்

பனங்கற்கண்டு – 1 டேபிள் ஸ்பூன் அல்லது கருப்பட்டி

செய்முறை

கற்றாழையில் உள்ள முட்கள், தோலை நீக்கவும்.

அதன் சதைப் பகுதியை 7 முறை தண்ணீரில் அலசவும்.

வழவழப்பு நீங்கியதும் பனங்கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

இதை அப்படியே குடித்துவிடவும்.

குறிப்பு:

பெரியவர்கள், 1 வயது + குழந்தைகளுக்கு ஏற்றது.

டீன் ஏஜ் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது.

இதனுடன் சாத்துக்குடி ஜூஸ் சேர்த்துகூட குடிக்கலாம்.

இதையும் படிக்க: குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

Image Source : StockFood

#5. ப்ரூட்ஸ் சிரப்

மலச்சிக்கல் முற்றிலுமாக நீங்கிவிடும்.

உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும்.

உடலுக்கு சத்து கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

தேவையானவை

மஞ்சள் வாழைப்பழம் – 2

பேரீச்சை – 1

சப்போட்டா – 1

செய்முறை

இவற்றையெல்லாம் மிக்ஸியில் அரைத்து கூழாக்கி கொள்ளுங்கள்.

இதை நாள்தோறும் குடிக்கவும்.

சப்போட்டா கிடைக்காத சமயத்தில் வேறு ஏதேனும் பழத்தை சேர்க்கலாம்.

அரைத்துக் குடிக்க விரும்பாதவர்கள், பழமாக சாப்பிட்டாலும் அதிக பலன்களைத் தரும்.

குறிப்பு:

பெரியவர்கள், 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

தினமும் காலை அல்லது மாலையில் சாப்பிட்டு வரலாம்.

இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்துக்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

தேங்காய்ப் பால் சேர்த்து ஸ்மூத்தியாக குடிக்கலாம்.

சுவையான, ஊட்டச்சத்துகள் நிறைந்த பானமாக அமையும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…