இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம் | 16 Home Remedies for Dry Cough in Tamil

இருமல், வறட்டு இருமலை போக்கும் 16 வீட்டு வைத்தியம்

குழந்தை இருமிகொண்டே இருந்தால் அதைப் பார்க்கவும் கேட்கவுமே கஷ்டமாக இருக்கும். குழந்தைகள் தவிர்ப்பதைப் பார்க்கும்போது நிச்சயம் மனம் கலங்கும். இந்த இருமல் ஏற்பட எப்படி பல காரணங்கள் இருக்கிறதோ அதுபோல தீர்வுகளும் பல இருக்கின்றன. அதை முயற்சித்து பாருங்கள்.

0 – 5+ வயது குழந்தைகளுக்கான 16 வீட்டு வைத்திய முறைகள்

#1.தாய்ப்பால்

தாய்ப்பாலை அடிக்கடி குழந்தைக்கு கொடுத்து வந்தாலே இருமல், வறட்டு இருமல் நீங்கிவிடும்.

தாய்ப்பாலில் உள்ள சத்துகளே கிருமிகளை கொல்ல போதுமானவை. பவுர்ஃபுல் ஆன்டிபாடிஸ் தாய்ப்பாலில் உள்ளதால் குழந்தைகளுக்கான சிறந்த மருந்து.

பிறந்த குழந்தைகள் முதல் 2 வயது குழந்தைகள் வரை தாய்ப்பாலே சிறந்த மருந்தாகும்.

#2.ஹெர்பல் ரப்

அரை கரண்டி தேங்காய் எண்ணெயில், ½ ஓமம், 2 பூண்டு (தட்டி போடவும்) ஆகியவற்றை சேர்த்து சூடாக்கி அடுப்பை நிறுத்தவும்.

இளஞ்சூடாக மாறிய பின், அந்த எண்ணெயை நெஞ்சு பகுதி, முதுகுப் பகுதி, பாதங்கள் ஆகிய இடங்களில் தடவி மசாஜ் செய்திட இருமல், வறட்டு இருமல் நீங்கும்.

1 மாத குழந்தை முதல் பெரிய குழந்தைகள் வரை இந்த வைத்தியம் பொருந்தும்.

#3.துளசி ரப்

3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 6 துளசி இலைகள் போட்டு அடுப்பில் வைத்து சூடேற்றவும்.

பிறகு இளஞ்சூடாக்கி குழந்தையின் கழுத்து, நெஞ்சுப் பகுதி, முதுகு, பாதம் ஆகிய இடங்களில் தடவலாம்.

#4. இஞ்சி டீ

ஒரு கப் தண்ணீரில் துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன் சேர்த்து 10-15 நிமிடங்கள் சூடேற்றவும்.
பிறகு அதை ஆறவைத்து இளஞ்சூடாக மாறியதும் 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

1+ வயது குழந்தைகளுக்கு சிறிது தேன் சேர்த்துத் தரலாம்.

இதையும் படிக்க:டயாப்பரால் ஏற்படும் பாதிப்புகள்… 99.9% குணமாக உதவும் வீட்டு வைத்தியம்

#5.தேன் – பட்டைத்தூள்

ஒரு வயது முடிந்த குழந்தைகளுக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை பட்டைத்தூள் கலந்து குழந்தைக்கு கொடுக்க இருமல், வறட்டு இருமல் நீங்கும்.

#6.சீரக குடிநீர்

ஒரு டம்ளர் தண்ணீரை சூடு செய்து, அதில் 1 டீஸ்பூன் சீரகம் போட்டு சூடேற்றி, ஆறவைத்து, இளஞ்சூடாக குழந்தைக்கு தரலாம்.

6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#7.மஞ்சள் பால்

இது நம் பாரம்பர்ய வைத்தியம்.

பாலில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுக்கலாம்.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வைத்தியம்.

#8.துளசி நீர்

ஒரு கப் தண்ணீரில் 10 துளசி இலைகள் போட்டு சூடேற்றவும். அதில் பனங்கற்கண்டு சிறிதளவு சேர்க்கலாம்.

அரை டம்ளராக சுண்டியதும் வடிகட்டி ஒரு வயது குழந்தைக்கு தரலாம்.

6+ மாத குழந்தைகளுக்கு பனங்கற்கண்டு இல்லாமல் கொடுக்கலாம்.

8+ மாத குழந்தைகளுக்கு ஒரு சிட்டிகை பனங்கற்கண்டு சேர்க்கலாம்.

இதையும் படிக்க: சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

இதையும் படிக்க: சளி, காய்ச்சலை விரட்டும் துளசி தண்ணீர் செய்வது எப்படி?

#9.கேரட் ஜூஸ்

இளஞ்சூடான தண்ணீர் கலந்து ஃப்ரெஷ் கேரட் ஜூஸ் தயாரித்து, குழந்தைக்கு 5 டேபிள் ஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம். 6+ மாத குழந்தைகளுக்கு ஏற்றது.

#10.ஹோம்மேட் ரப்

½ கப் தேங்காய் எண்ணெயில் ஒரு வெற்றிலை காம்பு, 4 துளசி இலைகள், ஒரு சின்ன வெங்காயம், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து சூடாக்கி நிறுத்திவிடவும்.

இளஞ்சூடாக மாறிய பின் கழுத்து, நெஞ்சு பகுதி, முதுகு பகுதி ஆகியவற்றில் தேய்த்து விடலாம். அனைத்து வயது குழந்தைக்கு ஏற்றது.

#11.கஷாயம்

அரை டீஸ்பூன் மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், ½ டீஸ்பூன் வெல்லம் ஆகியவற்றை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும்.

அரை டம்ளராக சுண்டியது நிறுத்திவிடவும். இதை வடிகட்டி 6+ மாத குழந்தைகளுக்கு 2 டீஸ்பூன் அளவுக்கு கொடுக்கலாம்.

#12.லெமன் – தேன்

ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் ¼ டேபிள் ஸ்பூன் ஃப்ரெஷ் லெமன் ஜூஸ் கலந்து ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வறட்டு இருமல், சாதாரண இருமல் சரியாகும்.

#13.சூப்

வெஜ் சூப் குழந்தைகளுக்கு நல்லது. 8+ மாத குழந்தைகளுக்கு தரலாம்.

1 வயது + குழந்தைகளுக்கு சிக்கன் சூப் தரலாம்.

#14.இளஞ்சூடான தண்ணீர்

6+ மாத குழந்தைகளுக்கு அவ்வப்போது இளஞ்சூடான தண்ணீர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கொடுத்து வர இருமல் வராது. இருமல் வராமல் இருக்க நீர்ச்சத்து தேவை.

தண்ணீர், ஜூஸ், சூப், ஹெர்பல் டீ போன்றவை கொடுத்து வந்தாலே எந்த இருமலும் வராது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம் 

#15.மாதுளை இஞ்சி ஜூஸ்

அரை டம்ளர் மாதுளை ஜூஸில் ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு கலந்து 6+ மாத குழந்தைகளுக்கு தரலாம்.

அரை டம்ளர் மாதுளை ஜூஸில் 1/4 டீஸ்பூன் மிளகு தூள் கலந்து 8+ மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

#16.வெண்டைக்காய் சூப்

5 வெண்டைக்காயை பொடியாக நறுக்கி ஒரு கப் தண்ணீர் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அதை வடிகட்டி சூப்பாக 6+ மாத குழந்தைக்கு தரலாம்.

இதில் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து 8+ மாத குழந்தைக்கு கொடுக்கலாம்.

இதையும் படிக்க: 0 – 3+ குழந்தைகளுக்கு ஏற்படும் சளியை நீக்கும் வீட்டு வைத்தியம்…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…