வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி... பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் | Herbal Tea and Coffee for Mom in Tamil

வெறும் வயிற்றில் குடிக்க ஹெல்தியான 9 வகை டீ, காபி… பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும்…

கர்ப்பிணிகள், தாய்மார்கள், 1 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் ஹெர்பல் காபி, டீ, பால் கொடுக்க வேண்டுமா… இதோ உங்களுக்கான பதிவு இது. காபி, டீ குடிக்காமலே நம்மால் வாழ முடியும். அசத்தலான, புதுமையான சுவையில் ஆரோக்கிய டீ, காபி, பால் வகைகளை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

9 வகை ஆரோக்கிய காபி, டீ மற்றும் பால்

#1. இஞ்சி டீ

தேவையானவை

  • இஞ்சி – 2 துண்டு
  • ஏலக்காய் – 1
  • பால் – கால் கப்
  • பனஞ்சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.

செய்முறை

  • இஞ்சி தோலை நீக்கவும்.
  • ஏலக்காயைத் தட்டி, இஞ்சியைத் தட்டி ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்கவிடவும்.
  • பாதியாக சுண்டியதும், வடிகட்ட வேண்டும்.
  • பால், பனஞ்சர்க்கரை கலந்து குடிக்கலாம்

பலன்கள்

  • செரிமானத்தை மேம்படுத்தும்.
  • வாயுவைப் போக்கும்.

இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

#2. சோம்பு-தனியா டீ

தேவையானவை

  • தனியா, சோம்பு – தலா 50 கிராம்
  • ஏலக்காய் – 1
  • கருப்பட்டி – 2 டீஸ்பூன்
  • புதினா – 1 கைப்பிடி

செய்முறை

  • தனியா, சோம்பை ஒன்றும் பாதியுமாக மிக்ஸியில் அரைக்கவும். இந்தப் பொடிதான் இந்த டீக்கு அடிப்படை.
  • 2 டம்ளர் தண்ணீரில் அரைத்து வைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்க்கவும்.
  • கருப்பட்டி, புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • ஒரு டம்ளராக மாறியதும் வடிகட்டி குடிக்கலாம்.

பலன்கள்

  • மக்னீசியம், மாங்கனீஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, கே நிறைந்துள்ளன.
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்.
  • தாய்ப்பால் சுரக்க உதவும்.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

#3. சின்னமன் டீ

தேவையானவை

  • கிரீன் டீ பவுடர் – 2 டீஸ்பூன்
  • பட்டைப்பொடி – கால் டீஸ்பூன்
  • பிரவுன் சுகர் – ஒரு டீஸ்பூன்

செய்முறை

  • கொதிக்கும் நீரில் கிரீன் டீ, பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு. பின், வடிகட்டி பிரவுன் சுகர் சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள்

  • ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
  • உடல் எடையைக் குறைக்கும்.
  • பிரசவத்துக்கு பிறகான தாய்மார்களுக்கு ஏற்றது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான கேரட் – டேட்ஸ் கீர் ரெசிபி

#4. ஆரஞ்சு தோல் டீ

தேவையானவை

  • ஆரஞ்சுத் தோல் பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்
  • புதினா – 1 கைப்பிடி
  • பிரவுன் சுகர் – 2 டீஸ்பூன்.

செய்முறை

  • ஆரஞ்சுத் தோலை பொடியாக நறுக்க வேண்டும்.
  • இரண்டு டம்ளர் நீரில் அதைப்போட்டுக் கொதிக்கவிட்டு, புதினா சேர்க்கவும்.
  • சுண்டியதும் எடுத்து, வடிகட்டி பிரவுன் சுகர் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்

  • விட்டமின் சி கிடைக்கும்.
  • சருமம் பளபளப்பாகும்.
  • கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிக்க ஏற்றது.

#5. ஆவாரம் பூ காபி

தேவையானவை

  • ஆவாரம் பூ பொடி – 2 டீஸ்பூன்
  • பட்டை – 1 துண்டு
  • கருப்பட்டி – ஒரு டீஸ்பூன்
  • பால் – 1/2 கப்

செய்முறை

  • இரண்டு டம்ளர் நீரில் ஆவாரம் பூ பொடி போட்டு கொதிக்கவிடவும்.
  • பாதியாக சுண்டியதும் வடிகட்டி, பால், கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்

  • செரிமானத்தை சீராக்கும்.
  • கர்ப்பக்காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் தீரும்.
  • கர்ப்பக்கால சர்க்கரை நோயை விரட்டும்.

குறிப்பு: ஃப்ரெஷ்ஷான பூ கிடைத்தாலும் பயன்படுத்தலாம்.

இதையும் படிக்க: ஹெல்தி, டேஸ்டி 4 வகை ஹோம்மேட் ஃப்ரூட் ஜாம்

#6. செம்பருத்திப் பூ காபி

தேவையானவை

  • செம்பருத்திப் பூ – 2
  • ஏலக்காய், கிராம்பு – தலா 1
  • மிளகு – 3
  • பால் – 1/2 கப்
  • பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை

  • செம்பருத்திப் பூவை ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிட வேண்டும்.
  • இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்து சேர்க்கவும்.
  • கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும்.

பலன்கள்

  • ரத்தத்தை சுத்திகரிக்கும்.
  • கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது.
  • சருமத்தைப் பாதுகாக்கும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் ஹாட் சாக்லேட் மில்க் செய்வது எப்படி?

#7. தாமரைப்பூ காபி

தேவையானவை

  • வெண்தாமரை (அ) செந்தாமரை – 1
  • மிளகு – 2
  • கிராம்பு, ஏலக்காய் – தலா 1
  • பால் – ½ கப்
  • பனங்கற்கண்டு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை

  • இரண்டு டம்ளர் தண்ணீரில் தாமரைப் பூவை மட்டும் போட்டுக் கொதிக்கவிடவும்.
  • கொதி வரும்போது மிளகு, ஏலக்காய், கிராம்புப் பொடி சேர்க்கவும்.
  • முக்கால் டம்ளர் அளவு சுண்டியதும், வடிகட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள்

  • மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும்.
  • கர்ப்பப்பையை வலுவாக்கும்.
  • பெண்களுக்கு மிகவும் ஏற்றது.
  • பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…

#8. பேரீச்சம் சிரப் பால்

தேவையானவை

  • பேரீச்சம் சிரப் – 2 டீஸ்பூன்
  • பால் – ஒரு டம்ளர்

இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?

செய்முறை

  • காய்ச்சிய பாலில் பேரீச்சம் சிரப் கலந்து குடிக்கவும்.

பலன்கள்

  • ரத்தசோகையைப் போக்கும்.
  • சருமத்தைப் பாதுகாக்கும்.
  • நினைவாற்றாலை மேம்படுத்தும்.
  • குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு ஏற்றது.

#9. சுக்கு காபி

தேவையானவை

  • சுக்கு – 1 துண்டு
  • ஏலக்காய் – 1
  • மிளகு – 3
  • பனஞ்சர்க்கரை – 2 டீஸ்பூன்
  • பால் – 1/2 கப்.

செய்முறை

  • சுக்கு, ஏலக்காய், மிளகு சேர்த்துப் பொடிக்கவும்.
  • இரண்டையும் ஒரு டம்ளர் நீரில் போட்டுக்கொதிக்கவிடவும்.
  • பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள்

  • செரிமானப் பிரச்னைகள் நீங்கும்.
  • சளி, கபம் நீங்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
  • ரத்தத்தைச் சுத்தம் செய்யும்.

இதையும் படிக்க: ஊட்டச்சத்துகளைத் தரும் ஹெல்தியான சாலட் ரெசிபி…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…