பல பேரின் கனவு வாழ்க்கை இந்த மீடியா… ஆனால் உண்மையில் அதிலிருப்பவர்களுக்கு மட்டும் தான் அதிலிருக்கும் கஷ்டங்கள் தெரியும்… நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும்? ஏன் சாதாரணமாக ஒரு குடும்பத்தில் சண்டை சச்சரவு, இதெல்லாம் இருப்பது சகஜம் தான்.. ஆனால் அதையே மீடியாவில் இருக்கு ஒருவர் வீட்டில் நடக்கும் போது அது ஊடகத்திற்கு விருந்தாகிறது…
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், ஒரு பெண் மீடியா என வந்து விட்டால், அவர்கள் தப்பானவர்கள், எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என்று அசால்டாக சொல்லிவிடுவார்கள்… இப்போது வரைக்கும் பல பெண்களின் கனவு மீடியாவாக இருந்தும், குடும்பங்கள் அனுமதிக்காததுக்கு இதுவும் ஒரு காரணம்… அதற்கும் மேல் தவறு என்பது மீடியாவில் மட்டும் தான் நடக்குமா? எல்லாத்துறையிலும் நடப்பது தான்.. ஆனால் மீடியா என்று வரும் போது அதை மிகைப்படுத்திக் காட்டி விடுகிறார்கள்…
நடிகை என்று ஆவலாகவும், பாசமாகவும், பார்ப்பவர்களுக்கு மத்தியில் சில மோசமான சிந்தனை உடைய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. நடிகை என்றெல்லாம் இல்லை, ஒரு பெண் என்றாலே, அதுவும் சமூக வலை தளங்களில் இருந்தால் தவறான குறுஞ்செய்திகள் வரத்தான் செய்கின்றன.. அவர்களை பிளாக் செய்துவிட்டு செல்ல வேண்டியது தான்… வேறு வழியில்லை காரணம் அதை ஒரு பெண் வெளியே கூறினால்.. சமூக வலை தளங்களில் இருந்தால் அப்படித்தான் நடக்கும், இதற்குத்தான் எப்.பியில் அக்கவுன்ட் வைக்க கூடாது.. இன்ஸ்டா பக்கம் போகக்கூடாது என்று அவர்களை தண்டிப்பார்கள் என்று பார்த்தால்? நம்மைத்தான் குறை சொல்வார்கள்.. இது சமூக கொள்கை போல?
இந்நிலையில் தான், அனிதா சம்பத்திற்கு யாரோ ஒரு நபர் தவறாக தொடர்ந்து மெஜேஜ் அனுப்பி வந்திருக்கிறார்.. அதனால் கோபமடைந்த அவர்.. அவருடைய போட்டோவையையும், இன்ஸ்டா பக்கத்தையும், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டு, அவர் குடும்பத்து ஆட்கள் கிட்டையே தன்னுடைய நியாயத்தை கேட்டிருக்கிறார்… இதில் அந்த நபரும், அவர் மனைவியுடனும், தங்கையுடனும் வெளியிட்டிருந்த போட்டோவை, போட்டு நல்லா நாலு கேள்வி கேட்டுருக்காங்க… அதைப்பார்த்துட்டு வேற எவனும் இப்படி பண்ணுவானா? நீங்களே அந்த பதிவை பாருங்க….