குழந்தைகள் பிறந்து 0-6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும். 6 மாதத்துக்கு பிறகு திடஉணவுகளைக் கொடுக்கலாம். குழந்தைக்கு செரிக்காத, ஒவ்வாத உணவுகளைக் கொடுத்தால் குழந்தையின் ஆரோக்கியம் கெடலாம் (Foods to avoid feeding your Baby)
எனவே கவனமாக இருக்கவும்.
குழந்தைகளின் உணவுத் தட்டிலிருந்து சில உணவுகளை சில காலம் வரை தராமல் இருப்பது நல்லது. அவை என்னென்ன? பார்க்கலாம் வாங்க…
0-12 மாத குழந்தைகளுக்கு தரவே கூடாத உணவுகள்…
#1. பசும்பால்
- குழந்தைக்கு ஒரு வயது தொடங்கிய பிறகுதான் பசும்பால் கொடுக்க வேண்டும்.
- தாய்ப்பாலுக்கு பதிலாகவோ ஃபார்முலா மில்குக்கு பதிலாகவோ பசும்பாலை தரவே கூடாது.
- பசும்பாலில் உள்ள புரதங்களை குழந்தைகளால் செரிக்க முடியாது. இதனால் குழந்தைகளுக்கு செரிமான கோளாறு வரும்.
- இரும்புச்சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாதிப்புக்குள்ளாகும்.
- குழந்தையின் உடலில் நீர் வறட்சி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
- 9 மாதத்துக்கு மேல் யோகர்ட் தரலாம். இதில் உள்ள நல்ல பாக்டீரியா குழந்தைக்கு நன்மையையும் செய்யும்.
#2. உப்பு
- குழந்தைகளுக்கு உப்பு கொடுப்பது தப்பு.
- குழந்தைகளுக்கு சுவை அரும்புகள் முழுமையாக வளர்ச்சி பெற்று இருக்காது.
- எனவே, உப்பு, இனிப்பு போன்ற சுவை குழந்தைகளுக்கு தெரியாது.
- பிளெயினான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உப்பு சேர்க்க தேவையில்லை.
- தாய்ப்பாலிலே சோடியம் கிடைத்துவிடும். மேலும், ஃபார்முலா பாலில் சோடியம் இருக்கும்.
- நீங்கள் கூடுதலாக உப்பை திடஉணவில் சேர்த்து கொடுத்தால், குழந்தையின் உடலில் அதிக உப்பு சேரலாம்.
- இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கும்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான ஹோம்மேட் நட்ஸ் பவுடர் செய்வது எப்படி? (Homemade Nuts Powder)
#3. சர்க்கரை
- தீட்டப்பட்ட அதாவது ரீஃபைன்ட் சர்க்கரையை குழந்தைகளுக்கு தரவே கூடாது. பெரியவர்களும் சாப்பிட கூடாது.
- இதனால் பற்களில் சிதைவு ஏற்படலாம். பல நோய்களுக்கு காரணமாகும்.
- நோய் எதிர்ப்பு ஆற்றலை பலவீனப்படுத்தும்.
- அதிக சர்க்கரை குழந்தைகளின் உடலில் சேர்ந்தால், உடல்பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வரலாம்.
- பழச்சாறுகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சர்க்கரை குழந்தைகளுக்கு நல்லது. ஆனால், இந்த ரீஃபைன்ட் சர்க்கரை பாதிப்பை ஏற்படுத்தும்.
#4. இறால், நண்டு
- இறால், நண்டு போன்றவை தாயுக்கோ குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி இருந்தாலோ குழந்தைக்கு இந்த உணவுகளைத் தர கூடாது.
- ஒரு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தரவே கூடாது.
- அலர்ஜி அறிகுறிகள் தீவிரமாக இருக்கும்.
- குழந்தைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே இவ்வித உணவுகளை துளி அளவுக்கு கூட குழந்தைகள் தர வேண்டாம்.
#5. காபி, டீ
- காபி, டீயில் கெஃபைன் அதிகமாக இருக்கும்.
- இதை குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் அளவுக்கு கூட கொடுக்க கூடாது.
- மூச்சுத்திணறல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சோர்வு, தூக்கமின்மை ஆகியவற்றை ஏற்படுத்தும்.
- பெரியவர்கள் சாப்பிடும்போது குழந்தைகள் பார்ப்பார்கள். எனினும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
- குழந்தைகள் காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கவும்.
- அல்லது காபி, டீ குடிப்பதை நிறுத்தி விடுங்கள்.
இதையும் படிக்க: ஹோம்மேட் டேட்ஸ் சிரப், டேட்ஸ் ப்யூரி செய்வது எப்படி?
#6. பீனட் பட்டர்
- கடைகளில் தற்போது பீனட் வெண்ணெய் மிகவும் பிரபலம்.
- அதை எல்லோரும் வாங்கி பிரெட்டில் தடவி காலை உணவாக சாப்பிடுகிறார்கள்.
- இது குழந்தைகளுக்கு ஒத்து கொள்ளாது. அலர்ஜியை ஏற்படுத்தும்.
- இதை விழுங்கவும் குழந்தைகள் சிரமப்படுவார்கள்.
- சுவாசம் தொடர்பான பிரச்னைகள் குழந்தைகளுக்கு வரலாம்.
- அலர்ஜியால் முகம், வாய் வீக்கம் ஏற்படலாம்.
#7. சிப்ஸ்
- கடைகளில் ஒரே எண்ணெயை திரும்பத் திரும்ப சூடுப்படுத்தி பொறிப்பார்கள்.
- கெட்ட கொழுப்பை உடலில் சேர்க்கும்.
- அலர்ஜி ஏற்படும்.
- வயிறு உப்புசம், ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவை வரலாம்.
- இதன் கூர்மையான முனைகள் குழந்தையின் வாய், நாக்கை சேதப்படுத்தலாம்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள் (Unsafe Foods that kids to avoid)
#8. முட்டை
- குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும்.
- ஆனால், தீவிரமான அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.
- ஒரு வயதுக்கு பின்னர் முட்டை கொடுக்கலாம். அல்லது மருத்துவர் அனுமதித்தால் 11-வது மாதத்திலிருந்து கொடுக்கலாம்.
- முட்டையை கொடுத்தால் எந்த மசாலாவும் அதில் சேர்க்காமல் பிளெயினாக கொடுக்கலாம். ஒரு வயதுக்கு பின்தான் தர வேண்டும்.
#9. பாப் கார்ன்
- குழந்தைகள் அருகில் சற்று பெரிய குழந்தைகள் யாரேனும் பாப் கார்ன் சாப்பிட்டு இருந்தால் குழந்தையும் சாப்பிட ஆசைப்படும்.ஆனால், இது குழந்தையின் தொண்டையில் அடைத்துக் கொள்ளும் அல்லது மாட்டி கொள்ளும்.
- பாப் கார்னில் வெளியில் உள்ளவை எளிமையாக வாயில் கரைந்துவிடும். ஆனால் உள்ளிருக்கும் துகள் எளிதில் கரையாது. வாயில் சிக்கி கொள்ளும்.
- 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான், பாப் கார்ன் தரவேண்டும் எனக் குழந்தை நல மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இதையும் படிக்க: குழந்தைகளுக்கான 6 ஹெல்தி ஜூஸ் – ஸ்மூத்தி வகைகள்…