பால் அலர்ஜி இருப்பவர்களுக்கு மாற்று வழி என்ன? பாலைவிட அதிக சத்துள்ள 5 பானங்கள் | Milk Allergy in Kids in Tamil

பால் அலர்ஜி இருப்பவர்களுக்கு மாற்று வழி என்ன? பாலைவிட அதிக சத்துள்ள 5 பானங்கள்…

பால் அலர்ஜியாக இருக்கலாம். பால் பிடிக்காதவர்களும் இருக்கலாம். அவர்களுக்கெல்லாம் என்ன மாற்று எனக் கேட்டால் நிறைய ரெசிபிகள் இருக்கின்றன. பாலை விட அதிக சத்து மிக்க பானங்களை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பெரியவர்களும் சாப்பிடலாம்.

பாலுக்குப் பதிலாக சத்து மாவு கஞ்சி போன்றவற்றைக் கொடுக்கலாம். இதுவும் சரியான மாற்று வழிதான்.

பாலுக்குப் பதிலாக பழச்சாறுகளைக் கொடுப்பதும் சிறந்த வழி.

பால் வடிவிலே தர வேண்டும் என நினைப்பவர்கள். பசும்பால் இல்லாமல் வேறென்ன பாலை குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என நினைப்பவர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

8+ மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். கீழ்காணும் ரெசிபிகள் அனைவருக்கும் ஏற்றது. சத்துள்ளது, சுவை மிக்கது.

5 வகை சத்துள்ள சுவையான பால்

#1. நிலக்கடலை பால்

Image Source : Sharan India

தேவையானவை

நிலக்கடலை – 1 கப்

முந்திரி – 6

ஏலக்காய் – சிறிதளவு

செய்முறை

நிலக்கடலை, முந்திரியை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதனுடன் ஊறவைத்த முந்திரியும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.

முளைக்கட்டிய நிலக்கடலை மற்றும் முந்திரி, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து, வேண்டும்.

குறிப்பு:

நிலக்கடலை அலர்ஜி இருப்பவர்கள், இதைத் தவிர்க்கலாம்.

பலன்கள்

2+ வயதுள்ள குழந்தைக்கு தரலாம். உடலுக்கு எனர்ஜி தரும்.

மாதவிடாய் காலத்தில் நிலக்கடலை பாலைக் குடித்து வந்தால், அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கைத் தடுக்கும்

பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் இ, நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.

மூளை சுறுசுறுப்பாகவும் எலும்புகள் வலிமையாகவும் இருக்கும்

இதையும் படிக்க: தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்…

#2. தேங்காய்ப் பால்

Image Source : Balance by BistroMD blog

தேவையானவை

தேங்காய் – 1

சர்க்கரை – தேவையான அளவு

ஏலக்காய் – 1

செய்முறை

தேங்காயை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.

அரைத்த விழுதைப் பிழிந்து தேங்காய்ப் பால் எடுக்கவும்.

பின்னர் பிழிந்து எடுத்த சக்கையை சுடுதண்ணீரில் போட்டு நன்கு கிளறவும்.

மீண்டும் தேங்காய்ப் பால் எடுக்கவும்.

பலன்கள்

தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்கள் கொண்டது.

நல்ல கொழுப்பு உடலில் சேரும்.

வயிற்று, வாய், தொண்டை, உணவுக்குழாய் ஆகிய உறுப்புகளுக்கு நல்லது.

நீண்ட நேரம் பசி தாங்கும்.

இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

#3. கேழ்வரகு பால்

Image Source : Dietfruitfully

தேவையானவை

கேழ்வரகு – அரை கப்

தேங்காய் – அரை மூடி

ஏலப்பொடி – ஒரு சிட்டிகை

வெல்லம் – தேவையான அளவு

செய்முறை

கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறவைத்த கேழ்வரகுடன் தேங்காயை சேர்த்து, முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.

வடிகட்டியில் போட்டு பால் எடுக்கவும்.

பிறகு, மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர் பிழிந்து பால் எடுக்கவும்.

இதுபோல் 3-4 முறை செய்யலாம்.

இந்தப் பாலை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

லேசாகப் பால் திக்காகும்போது ஏலப்பொடி, வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துக் கலக்கவும்.

அடுப்பை நிறுத்தி, பாலை ஆறவிட்டு இளஞ்சூடாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

குறிப்பு

8+ மாத குழந்தைக்கு தரலாம். இனிப்புக்கு வெல்லம் தவிர்த்து டேட்ஸ் சிரப் சேர்த்துக் கொள்ளுங்கள்.

1 வயது + குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் குடிக்கலாம்.

பலன்கள்

ஊட்டச்சத்துகள் மிக்கது.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு திறனைத் தரும்.

வயிற்றுக்கு நல்லது.

சருமத்துக்கு ஆரோக்கியத்தை சேர்க்கும்.

இதையும் படிக்க: ஹோம்மேட் போர்ன்விட்டா சுவையில் ஹெல்த் டிரிங்க் பவுடர் செய்வது எப்படி?

#4. பாதாம் பால்

Image Source : The Spruce eats

தேவையானவை

பாதாம் – 1 கப்

ஏலக்காய் – 1

விதை நீக்கிய பேரீச்சை பழம் – 1

செய்முறை

ஒரு நாள் இரவு முழுவதும் பாதாமை ஊற வைத்து விடுங்கள்.

மிக்ஸியில் பாதாம், ஊறவைத்த தண்ணீர், ஏலக்காய், பேரீச்சை பழம் ஆகியவற்றை போட்டு நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிகட்டி கொள்ளவும்.

3-5 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம்.

குறிப்பு

வடிகட்டி திப்பியாக இருப்பதை அவனில் பேக் செய்து பவுடராக்கி கொள்ளலாம். கஞ்சி, கீர், பான் கேக் இனிப்பு ரெசிபிகள் போன்றவற்றில் சேர்க்கலாம்.

பலன்கள்

உடல் எடை அதிகரிக்க உதவும்.

பார்வைத்திறன் மேம்படும்.

சருமம் பொலிவாகும்.

இதையும் படிக்க: 5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

#5. முந்திரி பால்

Image Source : A virtual Vegan

தேவையானவை

முந்திரி – 1 கப்

ஏலக்காய் – 1

விதை நீக்கிய பேரீச்சை பழம் – 1

செய்முறை

ஒரு நாள் இரவு முழுவதும் முந்திரியை ஊற வைத்து விடுங்கள்.

மிக்ஸியில் முந்திரி, ஊறவைத்த தண்ணீர், ஏலக்காய், பேரீச்சை பழம் ஆகியவற்றை போட்டு நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிகட்டி கொள்ளவும்.

3-5 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம்.

குறிப்பு

வடிகட்டி திப்பியாக இருப்பதை, அவனில் பேக் செய்து பவுடராக்கி கொள்ளலாம். சத்து மாவு கஞ்சி, கீர், பான் கேக், இனிப்பு ரெசிபிகள் போன்றவற்றில் சேர்க்கலாம்.

பலன்கள்

உடலில் நல்ல கொழுப்பு சேரும்.

உடல் மெலிந்த குழந்தைக்கு சிறந்த உணவு.

உடனடி எனர்ஜி கொடுக்கும்.

இதையும் படிக்க: குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…