ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ் | Clean Feeding Bottle Tips in Tamil

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. அதைத் தடுக்க ஃபீடிங் பாட்டிலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

இந்தப் பதிவை படிக்கும் முன் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்… பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்று கிடையவே கிடையாது. மிகவும் மோசமான பிளாஸ்டிக்,  மோசமான பிளாஸ்டிக், குறைந்த மோசமான பிளாஸ்டிக் என்று மட்டுமே வகைப்படுத்த முடியும்.

நான் நல்ல, தரமான, பாதுகாப்பான பிளாஸ்டிக் வைத்திருக்கிறேன். விலை உயர்ந்தது. இதெல்லாம் நீங்கள் பெருமையாக சொல்லி கொள்ளலாமே தவிர… அறிவியல் படியாகவும் சூழலியல் தொடர்பாகவும் எந்த பிளாஸ்டிக்குமே பாதுகாப்பானது அல்ல. வேறு வழியின்றி குறுகிய காலத்துக்கு பயன்படுத்தி நிறுத்திவிடுவதே புத்திசாலித்தனம்.

இன்று பலர் விழிப்புணர்வு அடைந்து, சில பள்ளி நிர்வாகமே பிளாஸ்டிக் லன்ச் பாக்ஸ் மற்றும் வாட்டர் கேன் பயன்படுத்த கூடாது என்று சொல்கிறது. அப்படி இருக்க சின்ன சிறு பிள்ளைகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தும் முன்… ஒரு பெற்றோராக தன் சுய சிந்தனையுடன் நன்கு சிந்தித்து ஆலோசித்து முடிவு எடுங்கள்.

குழந்தை அழக்கூடாது என ரப்பர் நிப்பிளை வைப்பதும் தவறானது. அதுவும் பிளாஸ்டிக், லேட்டக்ஸ், சிலிக்கோன், ரப்பரால் தயாரானது.

நெஞ்சை நெருடிய ஒரு பதிவு. என் குழந்தை சிறுநீர் கழித்தால், சிறுநீரில் பிளாஸ்டிக் வாசம் வீசுகிறது என ஒரு தாய் சொல்கிறார். இது குழந்தையின் குற்றமா? நிச்சயம் இல்லை. தாயின் குற்றம்.

அறியாமையில் இருப்பதும் ஒருவித குற்றம்தான். நம் பிள்ளைகளை நாம்தான் காக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பாட்டிலை கொதிக்க வைத்து, லித்தியம் வெளியாகி அது குழந்தையின் உடலில் தாக்கி, சிறுநீர் வரை பாய்கிறது. நினைத்தாலே நெஞ்சை பதறவைக்கிறது.

குழந்தையின் ஒவ்வொரு விஷயங்களிலும் கவனமாக இருங்கள். பொறுப்புணர்வுடன் தங்கள் குழந்தைக்கு நல்லதா எனப் பல முறை சிந்தித்து செயல்படுங்கள்.

பாட்டிலை சுத்தம் செய்யும் முறை…

குழந்தை பாலோ, தண்ணீரோ குடித்த பின்பு அப்படியே போட்டு வைக்காமல் முடிந்தவரை சீக்கிரமே கழுவி விடுங்கள்.

குழந்தையின் பாட்டில் சுத்தம் செய்ய பாட்டில் பிரஷ் வைத்திருங்கள். அதை வைத்து நன்கு கழுவிய பின் அந்த பிரஷ்ஷை கட்டாயம் வெயிலில் காய வையுங்கள்.

வெதுவெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு கழுவலாம்.

கொஞ்சமாக பாத்திரம் சுத்தம் செய்யும் லிக்விட் பயன்படுத்தலாம்.

வாரம் ஒரு முறை கல்லுப்பு போட்டு சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

சோப் வாசம் நீங்கும் வரை நன்கு கழுவுங்கள்.

தயவு செய்து, கொதிக்கும் நீரிலோ சுடுநீரிலோ பிளாஸ்டிக் ஃபீடிங் பாட்டிலை போட வேண்டாம்.

தற்போது, ஸ்டீல் பாட்டில்கள் கிடைக்கின்றன. அதை நீங்கள் சுடுநீரில் போட்டு கழுவினால் பிரச்னையில்லை. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் ரப்பர் ஆகியவற்றை போட்டால் பாட்டிலில் இருந்து லித்தியம் (lithium) என்ற கெமிக்கல் வெளி வரும். இது குழந்தைகளின் உணவில் கலந்து நஞ்சாக மாறிவிடும்.

ஆபத்தான கெமிக்கல்களில் லித்தியமும் ஒன்று. சூடான உணவு, திரவம் பட்டால் பிளாஸ்டிக் பாட்டில் இருந்து லித்தியம் வெளியேறும்.

அதேபோல பிளாஸ்டிக் பாட்டிலில் சூடான பாலையோ ஊற்றி வைக்க வேண்டாம். அந்த பாலில் லித்தியம் கலந்துவிடும்.

உங்களது அறியாமையால் குழந்தைகளின் உணவு விஷயத்தில் தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம்.

கடைகளில் ஸ்டரிலைசிங் திரவம் கிடைக்கிறது. அதை வாங்கி பயன்படுத்தியும் கழுவலாம்.

இதையும் படிக்க: 0 – 4 வயது குழந்தையின் எடை, உயரம், தலை, பற்களின் வளர்ச்சி தெரியுமா?

Image Source : Youtube

எந்த குழந்தைகளுக்கு ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தலாம்?

10 மாத குழந்தைகள் வரை நீங்கள் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்தலாம். அதற்கு மேல் பெரியவர்கள் போல குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்தலாம்.

0-6 மாதம் வரை, கட்டாயம் தாய்ப்பால் கொடுக்கலாம்.

ஃபார்முலா மில்க் கொடுப்பவர்கள், ஸ்டீல் ஃபீடிங் பாட்டில் பயன்படுத்துங்கள்.

குழந்தைகள் சப்பும் அந்த ரப்பர், லேட்டக்ஸ், சிலிக்கோன், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்படும் என்பதால் குழந்தை பால் குடித்த உடனே வாயிலிருந்து எடுத்துவிடுங்கள்.

வாயில் அப்படியே சப்பி கொண்டு இருந்தால் பற்கள் சீரற்று முளைக்கும். ரூட் கேனல் வரை கிருமிகள் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஈறு பாதிக்கும். பல் முளைக்க சிரமமான நிலைக்கு போய்விடும்.

வெறுமனே ரப்பர் அல்லது ஃபீடிங் சக்கர் வாயில் வைக்கலாமா?

இது மிகப் பெரிய தவறாகும். பால், தண்ணீர் இல்லாத வெறும் பாட்டிலை சப்பி கொண்டு இருந்தால் காற்று வயிற்றின் உள்ளே புகுந்து வயிறு பெருக்க ஆரம்பிக்கும்.

குழந்தைக்கு வயிறு வலிக்கத் தொடங்கும்.

இதையும் படிக்க: குழந்தைக்கு 7 பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்… தீர்வு என்ன?

எவ்வளவு நேரம் ஃபீடிங் பாட்டில் குழந்தை வாயில் வைத்திருக்கலாம்?

20-30 நிமிடங்களுக்குள் பாலை குழந்தைக்கு கொடுத்துவிட முயற்சி செய்யுங்கள்.

அதற்கு மேல் ரப்பர், பிளாஸ்டிக், லேட்டக்ஸ், சிலிக்கோன் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் சக்கர், குழந்தையின் உமிழ்நீரோடு கெமிக்கல்கள் கலக்க ஆரம்பிக்கும்.

எப்போது பாட்டிலை ஸ்ட்ரிலைஸ் செய்யலாம்?

எப்போதும் கழுவும் போது இளஞ்சூடான நீரில் கழுவுவது இன்னும் நல்லது.

ஸ்டீல் பாட்டிலை தினமும்கூட 5 நிமிடம் இளஞ்சூடான/சூடான நீரில் போடலாம்.

ஆனால், பிளாஸ்டிக் பாட்டிலை இளஞ்சூடான நீரில் போட்டு ஸ்டரிலைஸ் செய்யுங்கள். நன்கு பிரஷ் போட்டு கழுவுங்கள்.

குழந்தை பால் குடித்து முடித்த பின், உடனே பாட்டிலை கழுவுங்கள். அப்படியே போட்டு வைக்க வேண்டாம்.

பாட்டில், ரப்பர், ரப்பர் ரிங் போன்ற அனைத்தையும் ஸ்டரிலைஸ் செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: குழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை? எதை சாப்பிட வேண்டும்?

Image Source : NHS

எவ்வளவு காலத்துக்கு ஃபீடிங் பாட்டிலை பயன்படுத்தலாம்?

பாட்டில் நிறம் மாறி இருந்தால் உடனே பாட்டிலை மாற்றுங்கள்.

பால் கசிந்தால்

துர்நாற்றம் வந்தால்

பாட்டில் உப்பி இருந்தால்

சின்ன சின்ன கோடுகள் இருந்தால்

பிளாஸ்டிக் உருகி பாட்டில் மெலிந்து இருந்தால்

இந்த அறிகுறிகள் உடனேயே பாட்டிலை மாற்ற வேண்டும்.

பொதுவாகவே 2 மாதத்துக்கு ஒருமுறை பாட்டிலை மாற்றுங்கள்.

முன்பெல்லாம் ஃபீடிங் பாட்டில் பதிலாக என்ன இருந்தது?

பாலாடையில் பால், மருந்து ஊற்றியே குழந்தைகளுக்கு கொடுத்தனர்.

அதுவே சிறந்த முறை. பாதுகாப்பான முறை.

ஃபீடிங் பாட்டில் தவிர்க்க என்ன செய்யலாம்?

ஸ்டீல் டம்ளரில் ஸ்ட்ரா வைத்து வரும் டம்ளரலில் குழந்தைகளுக்கு பால் குடிக்க பழக்கப்படுத்தலாம்.

முன்பெல்லாம், பால் குடிக்க வைக்க கோப்பையில் கொடுத்து, ஸ்பூனில் கொடுத்துப் பழக்கப்படுத்தினோமோ அதுபோல செய்யலாம்.

இதையும் படிக்க: குழந்தைக்கு உண்டாகும் காய்ச்சலுக்கான 10 வீட்டு வைத்தியம்…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…