விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ஆகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நன்கு ரசிக்க கூடிய ஒரு நிகழ்ச்சியாக இது திகழ்கிறது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து காமெடி அதகளம் செய்த பழனியை ரசிகர்கள் மறக்க முடியாது.
இந்த நிகழ்ச்சி பல திறமையான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. அதில் பங்கு பெற்று நம்மளை சிரிக்க வைத்தவர் தான் பழனி. தன் ரைமிங் வசனத்தால் பவர் பர்ஃபாமராக கலக்குபவர் இவர். பழனி சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சங்கீதா பேராசிரியை மற்றும் மேடைப் பேச்சாளரும் கூட. மனைவி குறித்து பழனி கூறுகையில், எங்கள் திருமணம் காதல் திருமணம் தான். என் வாழ்க்கையில கிடைச்ச பெரிய பொக்கிஷம் என் மனைவி சங்கீதா தான். இந்தப் பொக்கிஷம் தந்த தங்கப்பதுமை மகள் தான் யாழினி.
என் வாழ்க்கையில் பல்வேறு கட்ட போ ராட்டங்களை சந்தித்தேன். அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக சங்கீதா தான் இருந்தார் என மிகவும் உ ருக்கமாக கூறியுள்ளார் கலக்கப்போவது யாரு புகழ் பழனி அவர்கள்.