தொப்பை உள்ள குழந்தைகள்... எப்படி சரிசெய்வது?

தொப்பை உள்ள குழந்தைகள்… பலமா? எச்சரிக்கை அறிகுறியா?

குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. பெரியவர்கள் குண்டாக இருந்தால், அந்த எடையை குறைக்க என்ன செய்யலாம் எனச் சிந்திக்கிறோமோ அதே சிந்தனைகள் குழந்தைகள் உடல்நலத்திலும் (childhood obesity) இருக்க வேண்டும். குண்டு குழந்தை ஆரோக்கியம், ஒல்லி குழந்தை நோஞ்சான் என்பது தவறான கருத்து. அவரவர் உடல்நிலையைப் பொறுத்து ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுமே தவிர தோற்றத்தால் இல்லை.

சிறு வயதிலே வரும் உடல்பருமன் பிரச்னைகள், காரணங்கள், தீர்வுகள், தடுக்கும் வழிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

தொப்பை உள்ள குழந்தையை பார்த்து ரசிக்க வேண்டாம். விளையாட விடுங்கள். குழந்தைகளுக்கு தொப்பை வருவது சாதாரணமல்ல… உடலுழைப்பு இல்லாததை காட்டும் அறிகுறி… தொப்பை சிறு வயதிலே வருவது கவனிக்க வேண்டிய விஷயம். அப்பாவை போல் பிள்ளை என விட்டுவிடாதீர்கள்… அப்பாக்கும் இருக்கும் பிரச்னை பிள்ளைக்குமா எனக் கவனித்து செயல்படுங்கள். அலட்சியம் தவிர்க்க வேண்டும்.

சிறுவர்களுக்கு தொப்பை கூடாது. முந்தைய சிறுவர்கள் தொப்பையுடன் இருந்தனரா சொல்லுங்கள்… எத்தனை தூரம் ஓடுவார்கள்… சுறுசுறுப்புடன் இருந்தார்கள்… விளையாட்டு இருந்தது… ஆனால், இன்று? விளையாடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் டிவியில்… அல்லது செல்போனில் விளையாட்டு.. இது வெறும் கை அசைவு மட்டும்தான்..!

விளையாட்டு, உணவு, குழந்தையின் உறக்கம், வாழ்வியல் பழக்கம் போன்ற அனைத்தையும் சீர் செய்யுங்கள்.

உடல்பருமனாக என்னென்ன காரணங்கள்?

உடல் உழைப்பின்மை

மரபியல்

தவறான உணவுப் பழக்கம்

அதிகமான துரித உணவுகளை உண்பது

ஹார்மோன் பிரச்னை

அதிக நேரம் டிவி பார்க்கும் குழந்தைகள்

வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் குழந்தைகள்

Image Source : new life genetics

உடல்பருமனான குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னைகள் வரலாம்?

அதிக கொழுப்பு

அதிக ரத்த அழுத்தம்

சிறு வயதிலே இதய பிரச்னை

சர்க்கரை நோய்

ஆஸ்துமா

வயிறு பிரச்னை

எலும்பு பிரச்னைகள்

சரும பிரச்னைகளான ஆக்னி, பூஞ்சை தொற்று, சூட்டால் வரும் அரிப்பு

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 13 மாலை நேர ஸ்நாக்ஸ்…

உங்கள் குழந்தை அதிக எடையா என எப்படி கண்டுபிடிப்பது?

மருத்துவரிடம் அழைத்து சென்று உயரம், எடை, வயது ஆகியவற்றை சொல்லி பி.எம்.ஐ (BMI) செக் செய்து கொள்ளலாம்.

எடை குறைவு – பி.எம்.ஐ < 18.5

ஆரோக்கியமான எடை – பி.எம்.ஐ 18.5 – 24.9 க்குள் இருக்க வேண்டும்

அதிக எடை – பி.எம்.ஐ 25 – 29.9

உடல்பருமன் – பி.எம்.ஐ 30 அல்லது அதைவிட அதிகம்

அதிக எடை உள்ள குழந்தையை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும்?

பெற்றோர் அவர்களை ஊக்குவித்து, அவரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எடை அதிகமாக இருந்தால் என்னென்ன பிரச்னைகள் வரும் எனக் குழந்தைகளுக்கு முதலில் எடுத்து சொல்ல வேண்டும். சரியாக படிக்க முடியாது, கவனம் செலுத்த முடியாது, விளையாட முடியாது என சின்ன சின்ன உதாரணங்களை சொல்லி அறிவுறுத்தலாம். நோய்களைப் பற்றி சொல்ல வேண்டாம்.

உடலுழைப்பில் ஈடுபட வலியுறுத்த வேண்டும்.

வீட்டில் துரித உணவுகளை வாங்கி வைக்க கூடாது. குழந்தைகளை துரித உணவுகள் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ளவும்.

ஆரோக்கியமான பழக்கங்களை சொல்லிக் கொடுங்கள்.

தனிமையில் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

googletag.cmd.push(function() { googletag.display(‘div-gpt-ad-1528202144377-0’); });

ஆரோக்கியமான பழக்கங்களை குழந்தையிடம் கொண்டு வருவது எப்படி?

முதலில் நீங்கள் உதாரணமாக இருங்கள். அதைப் பார்த்து குழந்தைகளும் பழகும்.

குடும்பத்துடன் உடற்பயிற்சி செய்வது, நடப்பது, ஜாக்கிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது எனப் பயிற்சிகளை அன்றாடம் செய்யுங்கள்.

ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தை மகிழ்ச்சியாக கற்க வேண்டுமே தவிர கஷ்டப்பட்டு அழுதுகொண்டு கற்க கூடாது. அந்தளவுக்கு பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்.

குடும்பமாகவே டிவி, மொபைல், கேம்ஸ் போன்றவற்றில் நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.

வீட்டில் வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும். வெளியிலும் தான். பிஸ்கெட், ஃப்ரைட் ரைஸ், பீட்சா போன்ற அனைத்திலும் வெள்ளை சர்க்கரை, மைதா, மோனொசோடியம் குளுட்டமேட் எனும் உப்பு உள்ளது. உடல்பருமனாக்குவதோடு பல நோய்களையும் வர செய்யும்.

குழந்தைகளின் உணவில் வெள்ளை சோறை வெகுவாக குறைத்துவிட்டு காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், சிவப்பரிசி என மாற்றுங்கள். குடும்பமாக அனைவரும் சேர்ந்து இந்தப் பழக்கத்துக்கு மாறுவது இன்னும் நல்லது.

வெளியில் செல்லும் ஹோட்டல்களும் நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு ரெசிபிகளை தயாரிக்கும் ஹோட்டல்களாக செல்லுங்கள்.

குழந்தைகள் சரியாக தூங்கவில்லை என்றாலும்கூட உடல்பருமனாக மாறுவார்கள். சரியான தூக்கம் அவசியம். தூக்கத்தைக் கெடுக்கும் எலக்ட்ரானிக் பொருட்களை தள்ளி வையுங்கள்.

ஆடை நீக்கப்பட்ட பால் தரலாம். நல்ல கொழுப்பு நிறைந்த தேங்காய்ப் பால் கொடுக்கலாம்.

யோகர்ட், நீர்மோர் கொடுக்கலாம். எனர்ஜி மால்ட், சத்து மாவு என செய்து கொடுக்கலாம்.

மீடியம் சைஸ் தட்டில், காய்கறி, கீரை, கூட்டு, சோறு என வைத்துக் கொடுக்கலாம்.

சாப்பிடுகின்ற மேஜையில் நீல நிறத்தை குழந்தைகள் பார்க்கும்படி செய்யலாம். இதனால் அதீத பசி அடங்கும். கிரேவிங் குறையும்.

டிவி பார்த்துக்கொண்டே உணவை சாப்பிட அனுமதிக்க வேண்டாம்.

பழ சாலட், காய்கறி சாலட், யோகர்ட் கலந்த உணவுகளை நொறுக்கு தீனியாக கொடுக்கலாம்.

குழந்தைக்கு உடலுழைப்பு தரும்படி பாஸ்கெட் பால், ஃபுட் பால் என வாங்கி கொடுங்கள். விளையாட்டில் குழந்தைகளை கவனம் செலுத்தும்படி செய்யுங்கள்.

இதையும் படிக்க: வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் ராகி பூஸ்ட் பவுடர்…

உடல் எடை குறைக்கும் உணவுகள்

கொள்ளு சுண்டல், கொள்ளு சூப் அல்லது துவையல்

கொடம்புளி தண்ணீர்

டீடாக்ஸ் வாட்டர்

ஃபிளாக்ஸ் விதைகளை மோரில் கலந்து கொடுக்கலாம்

வெள்ளரிக்காய் சாலட்

கிரீன் டீ 2 கப் குடிப்பது

திராட்சை ஜூஸ் ஒரு டம்ளர்

போதுமான தண்ணீர்

காலை எழுந்ததும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்த தண்ணீரை அருந்தும் பழக்கம்.

புதினா டீ, இஞ்சி டீ குடிப்பது

பால் சேர்க்காத பழச்சாறுகள்

மயோனைஸ் சேர்க்காத சாலட்

Image Source : Sabaris Indian diet recipes

உடல்பருமனை குறைக்கும் ரெசிபி

தேவை

கொடம்புளி – 1 இன்ச்

செய்முறை

கொடம்புளியை பயன்படுத்தும் முன் கழுவ வேண்டும்.

இரவில் ஒரு டம்ளர் தண்ணீரில், கழுவிய கொடம்புளியை போட வேண்டும்.

மறுநாள் காலை அதை எடுத்து மண் பானை அல்லது ஸ்டீல் பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றவும். அதில் ஊறவைத்த கொடம்புளியும் அதன் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.

அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், மிதமான தீயில் வைக்கவும்.

மிதமான தீயிலே 5 நிமிடங்கள் வரை வைத்து அடுப்பை அணைத்து விடவும்.

இளஞ்சூடாக மாறியதும் கண்ணாடி ஜாரில் இவற்றை ஊற்றி வைக்கவும்.

எப்படி அருந்துவது?

சேமித்து வைத்த கண்ணாடி ஜாரிலிருந்து ஒரு டம்ளர் அளவு கொடம்புளி தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

காலை உணவு சாப்பிடுவதற்கு முன், அரை மணி நேரத்துக்கு முன்பு இதைக் குடிக்கவும்.

அதுபோல மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பே, அரை மணி நேரத்துக்கு முன் இதை ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து விட வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள்?

போதுமான அளவு தண்ணீரும் அருந்த வேண்டும். அப்போதுதான் பலன் கிடைக்கும்.

2-3 லிட்டர் அளவுக்குத் தண்ணீர் தினமும் அருந்த வேண்டும்.

2 மாதம் தொடர்ந்து இந்த கொடம்புளி டிரிங்கை செய்து குடிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்களும் தினமும் சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்க: குழந்தைகளுக்கு தரக்கூடாத 10 உணவு வகைகள்…

Related posts

உங்கள் குழந்தை வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமா? இதை முதலில் செய்யுங்கள்…

குழந்தைகளுக்கு வரும் டான்சில்! எப்படி சரி செய்வது?

பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தும் முறைகளும் தாய்ப்பால் சேமிக்க வழிகளும்…