இன்று சுக பிரசவத்தை விட அறுவை சிகிச்சை பிரசவம் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சிசேரியன் செய்ய பல காரணங்கள் இருந்தாலும், இதனால் பெண்கள் சுக பிரசவத்தில் ஏற்படும் வலி மற்றும் இன்னல்கள் இல்லாமல் எளிதாக குழந்தையை பெற்றெடுக்க முடியுமென்பதால், அதிகளவு இது நடக்கிறது.
இத்தகைய பிரசவத்தால் சில பிரச்சனைகள், சில கால இடைவெளியில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதைப் பற்றி பலருக்கும் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதனால் கருவுற்றிருக்கும் மற்றும் குழந்தை பெற திட்டமிடும் அனைத்து பெண்களும், சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் (Cesarean side effects), பிரச்சனைகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வது நல்லது. மேலும் சிசேரியனுக்கு பின் எப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பது?
ஏன் சிசேரியன் பிரசவம் நடக்கிறது?
சில சமயங்களில் அல்லது சில இக்கட்டான சூழ்நிலையில் அறுவைசிகிச்சை பிரசவம், தாய் மற்றும் சேய் இருவரையும் காப்பாற்ற ஒரு நல்ல தீர்வாக இருக்கிறது. அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுக்க இங்கே சில காரணங்கள்:
- பிரசவ வலி ஏற்பட தாமதமாவது ஒரு முக்கிய காரணம். சில சமயங்களில் பெண்களுக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்படுவதில்லை. இதனால் பிரசவம் தாமதிக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தாமதமானால் தாய் அல்லது சேய், யாருக்காவது உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உண்டாகலாம். இந்த சூழ்நிலையில் தான் சிசேரியன் பிரசவம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
- வயிற்றில் உள்ள குழந்தையின் உடல் நலத்தில் எதாவது சிக்கல்கள் ஏற்பட்டால், அதாவது குழந்தையின் இருதயத் துடிப்பில் மாற்றம் போன்று ஏதாவது அறிகுறி ஏற்பட்டால் அறுவைசிகிச்சை பிரசவம் பரிதுரைக்கப் படுகிறது.
- குழந்தை தவறான நிலையில் இருக்கும் போது, சுக பிரசவம் சவாலாகி விடும். இதனால் குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுக்க இந்த அறுவைசிகிச்சை பிரசவம் பரிந்துரைக்கப்படுகிறது.
- தாய் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கருவுற்றிருக்கும் போது சுக பிரசவம் சற்று சவாலாகி விடுகிறது. அதனால் அறுவைசிகிச்சை பிரசவம் ஒரு நல்ல தீர்வாக கருதப்படுகிறது.
- கர்ப்பபையில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டிருக்கும் போது அல்லது குழந்தை பாதுகாப்பாக வெளியே வர முடியாத சூழல் ஏற்படும் போது சிசேரியன் பிரசவம் செய்யப்படுகிறது.
- தொப்புள் கொடி குழந்தையை சுற்றி இருந்தால் அல்லது சரியாக இல்லை என்றால், குழந்தையை சுக பிரசவம் மூலம் வெளியே எடுப்பது சவாலாகி விடும். அந்த சமயத்தில் அறுவைசிகிச்சை மூலமாக பிரசவம் செய்யப்படுகிறது.
- தாய்க்கு ஏதாவது உடல் நல பிரச்சனை இருந்தால், அதனால் பிரசவத்தின் வலியை தாங்க முடியாமல் போகும் தருணத்தில் பாதுகாப்பாக குழந்தையை வெளியே எடுத்து தாயின் உயிரையும் காக்க அறுவைசிகிச்சை பிரசவம் செய்யப்படுகிறது.
முதல் குழந்தை அறுவைசிகிச்சை பிரசவத்தால் பிறந்திருந்தால், இரண்டாவது குழந்தையும் அப்படி பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இது தவிர்த்து சில பெண்கள், விரும்பியே சிசேரியன் பிரசவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். கர்ப்பிணியே இப்படிக்கேட்பதால் சில மருத்துவர்கள் சம்மதிக்கிறார்கள். இதற்கு சிசேரியன் பிரசவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றின விழிப்புணர்வு இல்லாததே முக்கிய காரணம். அதனால் இந்த பிரசவ முறையைப் பற்றி தெரிந்து கொண்டபின், இதை தேர்ந்தெடுக்க முடிவு செய்வது நல்லது.
சிசேரியன் பிரசவத்தால் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளும் உபாதைகளும்!
தாய் நலமாக குழந்தை பெரும் வாய்ப்பு ஒரு பக்கம் இருக்க, இத்தகைய அறுவைசிகிச்சையால் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் அதிகம் சிந்திக்க வேண்டும். நீங்கள் அறுவைசிகிச்சை பிரசவத்தை தேர்ந்தெடுக்கும் முன், உங்கள் குழந்தைக்கு ஏற்பட உள்ள பிரச்சனைகளை பற்றி சற்று தெரிந்து கொள்ளுங்கள்:
சுவாச பிரச்சனையை:
அறுவைசிகிச்சை பிரசவத்தால் குழந்தைக்கு முதலில் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படும். பிறந்த முதல் சில நாட்களுக்கு குழந்தையின் சுவாசம் இயல்புக்கும் மாறாக வேகமாக இருக்கும். இதனால் குழந்தை அதிக அளவில் அசௌகரியத்தை பெறுகிறது.
- இதையும் படிங்க: கர்ப்பம் வேண்டாம்! செக்ஸ் வேண்டும்! எது சரியான நேரம்?
அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்கள் மற்றும் நோய்தொற்று:
அறுவைசிகிச்சை செய்யும் போது குழந்தைக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவ்வாறு காயம் ஏற்பட்டால் குழந்தைக்கு நோய்தொற்று விரைவாக ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது நாளடைவில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்த்தியையும் பெரிதாக பாதிக்கக் கூடும். இதனால் அவன் வளரும் போது பலவீனமானவனாக வளருகிறான்.
மயக்க மருந்தின் பாதிப்பு:
அறுவைசிகிச்சை செய்யும் போது மயக்க மருந்து தாய்க்கு தரப் படுகிறது. இது நிச்சயம் குழந்தையையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த மருந்துகள் குழந்தையின் உடலில் பிறக்கும் போது செலுத்தப் படுகிறது. இதனால் நாளடைவில் குழந்தை பலவீனமான உடல் ஆரோக்கியத்தோடு வளர நேரிடும்.
சிசேரியன் பிரசவத்தால் தாய்க்கு ஏற்படும் பக்க விளைவுகள்!
அறுவைசிகிச்சை பிரசவத்தால் தாய்க்கு ஏற்படக்கூடிய சில முக்கிய பக்க விளைவுகளும், உபாதைகளும் என்னவென்று பார்க்கலாம்:
- கருப்பை மற்றும் இடுப்பு உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது குழந்தை பிறந்த பின் தாயை பெரிதும் பாதிக்கும்.
- அதிக இரத்த போக்கு. அறுவைசிகிச்சை பிரசவத்தால் அதிக இரத்த போக்கு தாய்க்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதனால் தாய்க்கு இரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது அவளது இயல்பான வாழ்க்கை முறையை நாளடைவில் பெரிதும் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
- இதையும் படிங்க: எந்த கருத்தடை நல்லது?
- குடல் அல்லது சிருநீரகப்பையில் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் நோய்தொற்று வேகமாக ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
- மேலும், அறுவைசிகிச்சை முடிந்த பிறகு தாய்க்கு வயிற்றில் தளும்பும் ஏற்படும். இதை எளிதாக போக்கி விட முடியாது. இத்தகைய தழும்பு உடலின் உள் பகுதியிலும் ஏற்பட்டு சில உபாதைகளை ஏறபடுத்த வாய்ப்பு உள்ளது.
- தாய் மற்றும் சேய் அதிக நாட்கள் மருத்துவ மனையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் விரைவாக வீட்டிற்கு வந்து இயல்பான வாழ்க்கையைத் தொடங்க முடியாமல் போகலாம்.
- அறுவைசிகிச்சை பிரசவத்தால் அதிக நாட்கள் தாய் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பிறரின் உதவி அவளுக்கு குறைந்தது 6 மாதங்களுக்குத் தேவைப்படுகிறது.
- அறுவைசிகிச்சை செய்யும் போது அதிக மருந்து உடலினுள் செலுத்தியதால் அதன் தாக்கம் பல நாட்களுக்கு இருக்கக் கூடும். மேலும் இதனால் உடலில் வலி மற்றும் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- தேவை இல்லாது மேலும் சில அறுவைசிகிச்சை பிற்காலத்தில் செய்ய நேரிடலாம். குறிப்பாக சிசேரியன் பிரசவம் செய்யும் போது பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டால் அதை சரி செய்ய அறுவைசிகிச்சை செய்ய நேரிடலாம்.
- மனதளவில் தாய் அதிகம் பாதிக்கப்படுகிறாள். இது அவளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இது மட்டுமல்லாது மேலும் சில காரணங்களும் இதனுள் அடங்கும். அதனால் முடிந்த வரை அறுவைசிகிச்சை பிரசவத்தை தவிர்த்து சுக பிரசவத்தை அதிகம் தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். தாய் சேய் இருவரின் நலமும் காப்பாற்றப்படும்.
இதையும் படிக்க: வெயிலுக்கு இதமான 5 ஹெல்தி, டேஸ்டி சாலட்…