பிக்பாஸ் ஷெரினுக்கும், சிவானிக்கும் இப்படி ஒரு நெருக்கமா? யாரும் அறியாத புதிய தகவல் !!!

பிக்பாஸ் ஷெரினுக்கும், சிவானிக்கும் இப்படி ஒரு நெருக்கமா? யாரும் அறியாத புதிய தகவல் !!!

விஜய் டி.வியில் கடந்த நான்கு சீசன்-களாக பிக்பாஸ் டி.ஆர்.பி -யில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது… இதில் கலந்துக் கொண்டு பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர்… அந்த வரிசையில் 3-வது சீசனில் மிகவும் பிரபலமடைந்த, நம்ம ஷெரின் விசில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்… அதில் வரும் மிகவும் பிரபலமான“அழகிய அசுரா” பாடல் மூலம் பல 90’ஸ் கிட்ஸ்-களின் கனவு கன்னியாக வலம் வந்தவர்…

 

தமிழ் திரையுலகில் திடீரென ஒரு நடிகை டாப் ஹியரில் மேலே செல்வதும், பின் காணாமல் போவதும், மிக சகஜமான ஒன்று தானே… அதே போல் தான் இவரும், வந்த வேகத்திலேயே காணாமல் போன பட்டியலில் சேர்ந்திருந்தார்… பின் கடந்த 2019-ல் நடந்த பிக்பாஸ் சீசன்-3 மூலம் மீண்டும் தமிழ் மக்களின் மனதை கவர்ந்திருந்தார்… ஆரம்பத்தில் பல ட்ரோல்கள், மீம்ஸ்களை சந்தித்தாலும், பின் அவருக்கான ஒரு இடத்தை கைப்பற்றினார்…அவருக்கும், இணை போட்டியாளரான தர்ஷனுக்கும் நடுவே.. நட்பையும் தாண்டிய கிசுகிசுக்கள் வந்து குவிந்து, அவரை உச்சத்திற்கே கொண்டு சென்றது…

அதே போல் கடந்த சீசனில் பங்கேற்றவர்தான் நம் சிவானி… போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கிய அவர், ஆரம்பத்தில், அமைதியின் உருவாய் இருந்து, பின் பாலாஜிக்கும், அவருக்கும் ஏதோ காதல், ஊடல், மோதல் போன்ற கிசுகிசுக்களால் அந்த சீசனில் ஒரு முக்கிய போட்டியாளராக மாறினார்… அதிலும் அவரின் அம்மா வந்து, அந்த போட்டிகளத்தை, யு த் த களமாக மாற்றி விட்டுச் சென்றிருந்தார்… அதனாலேயே சிவானி ஆர்மியை விட, சிவானி மம்மி ஆர்மி அதிகமானது…

இப்போது அதே விஜய் டி.வியில், பி.பி ஜோடிகள் என்ற புது நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார்… இந்நிலையில், சிவானிக்கும், ஷெரினுக்கும் இன்று பிறந்த நாள்… அதை விஜய் டிவியின் இன்ஸ்டாவில் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது… அதைப்பார்த்து ரசிகர்கள் அனைவரும்.. இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாளா? என ஆச்சர்யத்தோடு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்… எங்களின் வாழ்த்துகளையும் உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறோம்…

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!