தமிழ் சினிமாவில் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது ஒன்றும் சாதாரண விசயமே இல்லை, முன்பெல்லாம் வருடதிற்க்கு பல அறிமுக நடிகர்களும், நடிகைகளும் அறிமுகமாவர்கள். ஆனால் தற்போதெல்லாம் ஏற்கனவே பிரபலமானவர்களும் திரைப்படங்களில் முக்கிய கதாபதிரங்களில் நடித்து வருகின்றனர்.
இவர்களின் ஆளுமையே தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக உள்ளது. இவர்களை மீறி தற்போது மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது எவ்வளவு க டினம் என்பது உங்களுக்கு தெரியும். தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் நடிகர் திலகம் என்று பேர் எடுத்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
இவரின் கால கட்டத்திற்கு பிறகு இவரின் மகன் பிரபு நடிக்க வந்தார். அப்பா சிவாஜி அளவிற்கு இல்லையென்றாலும், தனக்கென்று தனி இடத்தை பிடித்து விட்டார். பிரபுவிற்கு பிறகு அவரின் மகன் விக்ரம் பிரபு நடிக்க வந்தார்.
அதுமட்மின்றி சிவாஜியின் மற்றொரு பேரன் சிவாஜி தேவ் சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவ்விருவராலும் பெரிதும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம் பிடிக்க முடியவில்லை.இந்நிலையில் இவர்களை தொடர்ந்து சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.