Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஸியோமி மொபைல் வச்சிருக்கீங்களா? அப்ப இத நீங்க முதல்ல படிங்க!

ஸியோமி ஸ்மார்ட்ஃபோன் போலவே, அதில் தரப்படும் கஸ்டமைஸ்டு இயங்குதளமான MIUI பலரால் விரும்பி பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் பலவும், மற்ற இயங்குதளங்களில் இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், இந்த MIUI பயன்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய குறை என்னவெனில், அதில் அடிக்கடி காட்டப்படும் விளம்பரங்கள்தான். 

இந்த செயலியில் மட்டுமின்றி, செட்டிங்க்ஸ் பகுதிகளில் கூட விளம்பரம் காட்டப்படுகிறது. இது பயனாளர்களுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, வருமானத்திற்காக ஸியோமி காட்டும் இத்தகைய விளம்பரங்களை தடுக்க, முதலில் msa (MIUI System Ads) செயலியை கவனிக்க வேண்டும். இது வெளியில் தோன்றாது. செட்டிங்க்ஸ் பகுதியில் மறைந்திருக்கும்.

அங்கே சென்று Additional Settings/Authorization and Revocation என்ற பகுதியில், Revoke என தேர்வு செய்தால், msa செயலிக்கு தரப்பட்டுள்ள அனுமதி ரத்தாகிவிடும். இதையடுத்து, விளம்பரங்கள் வருவது குறைந்து விடும். இதேபோல, Privacy/User Experience/Ad Services பகுதியில் Personalized ad recommendations என உள்ள ஆப்ஷனை தேர்வு செய்தால் விளம்பரம் வருவது நின்றுவிடும்.

ஸியோமியை பொறுத்தவரையில், Recommendation என வரும் எந்த பகுதியும் விளம்பரம்தான் என அர்த்தம். எனவே, இந்த recommendation-களை தேர்வு செய்யும்போது கவனமாக இருந்தால், விளம்பரம் வருவதை கட்டுப்படுத்த முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தோழியுடன் லெஸ்பியன்! கணவனுடன் செக்ஸ்! ஒரே வீட்டில் இளம் பெண் வாழும் விநோத வாழ்க்கை!

tamiltips

இரட்டை குழந்தைகள் எப்படி உருவாகுதுன்னு தெஞ்சுக்க ஆசையா ??

tamiltips

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

tamiltips

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

tamiltips

அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் எல்லாம் விற்பனைக்கு வராது! மாருதி சுசூகி திடீர் முடிவு!

tamiltips