Tamil Tips
முக்கிய செய்திகள்

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவின் 90ஸ் ஹேண்ட்ஸம் ஹீரோ பிரஷாந்த். ‘டாப்ஸ்டார்’ என தன் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவரது முந்தைய பட்டப்பெயர் ஆணழகன்.எக்கச்சக்கமான பெண் ரசிகைகளைக் கொண்ட இவர் பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தவர்.

ஷங்கரின் இயக்கத்தில் இவர், ஜீன்ஸ் படம் மூலம் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் நடித்து உலகமெங்கும் வெற்றி கதாநாயகனாக ஜொலித்து வந்தார்.இன்றைய தலைமுறையின் தல, தளபதியெல்லாம் அப்போது பிரசாந்த் என்ற நடிகருக்கு பின்வரிசையில் இருந்தவர்கள் என்றுக்கூட சொல்வார்கள்.

அப்படி தமிழ் சினிமாவில் வலம் வரத்தொடங்கி அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.2000ம் ஆண்டுக்கு பின்னர் இடைவெளிவிட்ட பிரசாந்த் பொன்னர் சங்கர் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.

கடைசியாக வெளியான மம்பட்டியான் உள்ளிட்ட அவரது படங்கள் பெரிதாக ஹிட் அடிக்காததால், சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.அதன் பின், தெலுங்கில் ராம் சரண் தேஜா நடித்த ‘வினய விதேய ராமா’ படத்தில் அவரது அண்ணனாக பிரஷாந்த் தோன்றியது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது.

Thirukkural

ஆனால், எந்த படமும் இவரை அடுத்த ரவுண்டுக்கு தயாராக்கும் வகையில் இல்லை, இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த வித எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. ஆனால், தற்போது அந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆம், சமீபத்தில் ஹிந்தியில் வெளியான படம் அந்தாதுன். இந்த படத்தின் பட்ஜெட் 32 கோடி ரூபாய் தான். ஆனால், உலகம் முழுதும் 456 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த இவர் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால், நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிஸியாகி விட்டதால் பிரஷாந்த்-தை வைத்து அந்தாதுன் ரீமேக் படத்தை இயக்கவுள்ளார் என கூறுகிறார்கள். பிரஷாந்துக்கு இந்த கூட்டணி மட்டும் அமைந்து விட்டால் நம்ம டாப் ஸ்டார் மீண்டும் டாப்பில் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என பொதுவான ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

tamiltips

அடடே! தெறி பேபி நைனிகாவா இது? நன்றாக வளர்ந்து விட்டாரே.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!!

tamiltips

என்னது! காமெடி நடிகர் கொட்டாச்சிக்கு இவ்வளவு அழகான மனைவி மற்றும் குழந்தையா? நம்பவே முடியல.. பார்த்தா அசந்துருவீங்க… புகைப்படம் இதோ..!!

tamiltips

பாபநாசம் படத்தில் வரும் குட்டி பெ ண் தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆன ரசிகர்கள்..!!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

நடிகர் பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவியா இது? இவருக்கு இவ்வளவு பெரிய மகன், மகளா? தீ யாய் பரவும் புகைப்படம்..!!

tamiltips