நீங்கள் அடிக்கடி
இரவுப் பணி செய்பவரா? உங்கள் டி.என்.ஏ. சேதமடைவதாக ஹாங்காங் பல்கலைக் கழக ஆய்வு
ஒன்றில் தெரியவந்துள்ளது. அதன் கல்வி இதழில் ஆய்வு முடிவுகள்
வெளியிடப்பட்டுள்ளன.
இரவு நேரக்
கண்விழிப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய்கள், இதய நோய்கள், நரம்பு வியாதிகள்,
நுரையீரல் நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறதாம்.
முழு இரவும்
பணியாற்றுபவர்களின் டி.என்.ஏ. அவ்வாறு பணியாற்றாதவர்களின் டின்.என்.ஏவை விட 30
சதவீதம் அதிகம் சேதம் அடைவதாக தெரிய வந்துள்ளது.
டி.என்.ஏ. சேதம் என்பது
அதன் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும், அதனை சீரமைக்க முடியாத போது மரபணுக்
குறைபாடுகள், செல் இறப்பு புற்றுநோய் அறிக்குறிகள் போன்றவை ஏற்படுவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியமான 28 வயது
முதல் 30 வயது வரையிலான மருத்துவர்களை 3 நாட்கள் முழுமையாக தூங்கச் செய்தும், வேறு
சில மருத்துவர்களை இரவுப் பணியில் ஈடுபடுத்தியும் பரிசோதித்த போது டி.என்.ஏ.
பாதிப்புகள் தொடர்பான வேறுபாடுகள் தெரிய வந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் டி.என்.ஏ.
சேதத்துக்கும், தீவிர நோய்களுக்குமான தொடர்புகள் தொடந்து ஆய்வு
செய்யப்பட்டுவருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.