Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சித்தர்களின் கணக்குப்படி சித்திரையில்தான் புத்தாண்டு!

எந்த இடத்திலும் தை மாதத்தைத் தலை ராசி என்றோ, தலை மாதம் அல்லது முதல் மாதம் என்றோ சொல்லவில்லை. இடைக்காட்டுச் சித்தர் அவர்கள் மாத பலன்ளையும், வருட பலன்களையும் எழுதி வைத்துள்ளார். அவற்றை இன்றுவரை நாம் பின் பற்றி வருகிறோம். அவரும் சித்திரை தொடங்கியே வருடத்தைக் கணக்கிட்டுள்ளார்.

உயிரினம் வளர்வதற்குக் காரணமான பல முக்கிய அவதாரங்களும் சித்திரையில்தான் நடந்தன என்பது சித்திரையின் சிறப்பை மேலும் உறுதி செய்கிறது.

சதுர் மஹாயுகம் ஆரம்பித்தது சித்திரை முதல் தேதியன்று என்று பார்த்தோம்.

Thirukkural

சித்திரையின் வளர்பிறை துவிதியையில் கிருத யுகம் பிறந்தது.

சித்திரையின் வளர்பிறைப் பஞ்சமியில் கூர்ம கல்பம் பிறந்தது.

சித்திரையின் வளர்பிறை சப்தமியில் கங்கை நதி பிறந்தது.

சித்திரையின் வளர்பிறை திரயோதசியில் மத்ஸ்ய அவதாரம் நடந்தது.

சித்திரையின் தேய்பிறைப் பஞ்சமியில் வராஹ அவதாரம் நடந்தது.

அஸ்வினியில் தொடங்கும் சித்திரை.

சித்திரைக்கு உள்ள மற்றொரு முக்கியச் சிறப்பு, அஸ்வினி நட்சத்திரத்தில் அது ஆரம்பிக்கிறது. அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் இந்த நட்சத்திரத்தின் அதிபதிகள் ஆவர்.

அவர்களைக் குதிரைகளாகக் கொண்டு ஒற்றைச் சக்கரத்தேரில் சூரியன் வான் மண்டலத்தில் பவனி வருகிறான் என்று ரிக் வேத மந்திரங்கள் தெரிவிக்கின்றன. அஸ்வினி நட்சத்திரத்துக்கு மருத்துவர் என்ற சிறப்புப் பெயர் உண்டு. அஸ்வினி நட்சத்திரத்துக்கு அதிபதியான அஸ்வினி தேவர்கள், தேவ மருத்துவர்கள் எனப்படுகிறார்கள். நம்முடைய பிறந்த நாளை நாம் பிறந்த நட்சத்திரத்தின் போது கொண்டாடுவது போல புத்தாண்டுப் பிறப்பை சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் இருக்கும்போது கொண்டாடுவதால், அந்த அஸ்வினி தேவர்களது அருளால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சூரியன் பல பிறந்த நாள்களைப் பெறுகிறது. அதனால் சித்திரையை கொண்டாடி நல்ல பலன்கள் பெறுவோம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அடர்ந்த வனம்! பரிசல் பயணம்! கறிக்கஞ்சி! பரளிக்காடு சுற்றுலாவை மிஸ் பண்ணிடாதீங்க!

tamiltips

ஆன்லைன் உணவு விநியோகத்தில் வருகிறது அமேசான்… அலறும் ஸ்விகி, சொமோட்டோ, ஊபர்!

tamiltips

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

tamiltips

நிறக்குருடு பிரச்னை யாருக்கெல்லாம் வரும்னு தெஞ்சுக்கோங்க!!

tamiltips

வேலை செய்யாமல் சும்மா படுத்திருந்தா போதுமாம்! ரூ.13 லட்சம் சம்பளம்! பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

tamiltips

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

tamiltips