Tamil Tips
லைஃப் ஸ்டைல்

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

இவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தமது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு ஒவ்வொரு நாளும் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தியுமுள்ளார்.

 

 இவருடைய கைப்பக்குவம் வீட்டினரை மட்டுமல்ல இணையதள சமையல் பிரியர்களையும் அடிமையாக்கியுள்ளது. இவர் தனது சமையல் வீடீயோக்களை  தனது பேரன் லக்ஷ்மணன் உதவியோடு இணையத்தில் வெளியீட்டுள்ளார். இவர் கிராமத்து சமையல் முதல் KFC சிக்கன் வரை சமைப்பதில் வல்லவர் மஸ்தானம்மா எப்பொழுதும் சமைப்பதற்கு விறகு அடுப்பையும் மண் சட்டியையும் தான் பயன்படுத்தினார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளார் ஒருநாள் தமது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டி சமைத்ததை லட்சுமணன் தற்செயலாக வீடியோ பதிவு செய்து பதிவிட்டிருக்கிறார். அது வைரலாக இணையத்தில் பரவியுள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் சிறுவயது முதலிலேயே தமது பாட்டி அற்புதமாக சமைத்து வருவது நினைவுக்கு வந்திருக்கிறது. பிறகென்னஉடனே பாட்டி சமைப்பதை வீடியோ எடுத்து செய்முறையுடன் பதிவிட தொடங்கிவிட்டார். மஸ்தானம்மா சமீபத்தில் தமது 106-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையும் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி இருந்தார். மஸ்தானம்மா தன்னுடைய 11 வது வயதில் திருமணம் செய்துயிருக்கிறார் இவருக்கு 5 மகன்கள் தன்னுடைய 22 வது வயதில் கணவரை இழந்தார். அவரே தனிஆளாய் மகன்களை வளர்த்தார். தனது வாழ்க்கை முழுவதையும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் வாழ்ந்து காட்டியுள்ளார்இத்தகைய பெருமை மிக்க மஸ்தானம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடல் களைப்பு இல்லாம, சூப்பர்மேன் போல சுறுசுறுப்பா இருக்கணுமா? அப்ப எலுமிச்சை ஜூஸ் சாப்பிடுங்க!

tamiltips

5 முறை அடுத்தடுத்து தோல்வி! மனம் தளரா முயற்சி! 6வது முறையில் சாதித்த விழுப்புரம் சித்ரா!

tamiltips

கம்பங்கூழ் சாப்பிட்டால் என்ன கிடைக்கும்?

tamiltips

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

tamiltips

இதைப்ப்டித்தால் புடலங்காய் என்றதும் முகம் சுளிக்க மாட்டீர்கள்

tamiltips

எள்ளில் சிறந்தது கருப்பா… வெள்ளையா… புஷ்டி தருவது எது?

tamiltips