Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பித்தவெடிப்பு பாடாய் படுத்துகிறதா?? இதோ சுலப டிப்ஸ் !!

அதனால் பித்தவெடிப்பு ஏற்படுகிறது. பித்தவெடிப்பை முறையாக கவனிக்காவிட்டால், அது போகவே போகாது என்ற அளவுக்குப் பெரிதாகி பாடாய் படுத்தும். பித்தவெடிப்பு சின்னதாய் இருக்கும்போதே எப்படி குணப்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை 10 நிமிடங்கள் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும்,பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து,பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

Thirukkural

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால்,பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம்.இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். அதேபோன்று தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது பித்தவெடிப்பு வராமல் தடுக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நெல்லை கீழப்பாவூர் நரசிம்மர்! வணங்கினால் போதும் எதிரிகளின் சதி தூள் தூளாகும்!

tamiltips

குழந்தை பிறப்புக்குப் பிறகு எடை குறைக்க மூன்றே வழிகள்!

tamiltips

புளியை சமையலுக்கு சேர்ப்பது நல்லதா அல்லது கெட்டதா??

tamiltips

நாள் முழுதும் உட்காந்துக்கொண்டே வேலைபார்ப்பதால் உங்கள் ஆரோக்யத்தை பற்றி கவலையா?

tamiltips

மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?

tamiltips

வெயிலில் சுற்றிவிட்டு ஐஸ் வாட்டர் குடித்தால் ரத்தக்குழாய் வெடிக்கும்! மக்களே உஷார்!

tamiltips