Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெட்டி முறித்தல் ஆபத்தா? அதனால் என்னென்ன தீமைகள் வருகிறது?

இதை ‘நெட்டி முறித்தல்’, ‘உடல் முறித்தல்’ என்றெல்லாம் சொல்வார்கள். நெட்டி முறிக்கும்போது, `சொடக்குச் சத்தம் வெளிப்பட்டதும் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைத்ததுபோல உணர்வார்கள். “தொடர்ச்சியாக நெட்டி முறிப்பது ஆரோக்கியமான பழக்கமல்ல’’ என்கிறார் எலும்பு மருத்துவர் ஆசிக் அமீன். நெட்டி முறிப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிடுகிறார்.

* விரல் எலும்புகளின் இணைப்புகளுக்கு இடையே ‘சைனோவியல்’ (Synovial Fluid) என்கிற திரவம் சுரக்கும். இதுதான் மூட்டு எலும்புகள் உரசாமலிருக்க எண்ணெய்போலச் செயல்படுகிறது. நீண்டநேரம் அசையாமலிருந்தால், குறிப்பிட்ட பகுதியின் எலும்புகளுக்கிடையே இந்தத் திரவம் மொத்தமாகச் சேர்ந்துவிடும். நெட்டி முறிக்கும்போது, எலும்பு இணைப்புகள் விரிவடைவதால், அதனுள் சேர்ந்திருக்கும் திரவம் வேகமாக நகரும்போது சொடக்குச் சத்தம் வெளிப்படுகிறது.

* தூக்கத்தின்போது உடல் அசைவு மிகக் குறைவாக இருப்பதால், தூங்கி எழுந்ததும் நெட்டி முறித்தால் சொடக்குச் சத்தம் அதிகமாக இருக்கும். நெட்டி முறிக்கும்போது ஏற்படும் இந்தச் சத்தம்தான், பலரை மீண்டும் மீண்டும் அதைச் செய்யத் தூண்டுகிறது. 

* 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிறைய நெட்டி முறித்தால், பிடி வலிமையின்றிப் போவது, முழங்கால் வீக்கம், தசைநார் பாதிப்பு போன்றவை ஏற்படலாம்.

* நெட்டி முறிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட, குறிப்பிட்ட அந்தப் பகுதியை அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு அவ்வப்போது உட்படுத்தவேண்டியது அவசியம்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இலந்தை பழத்தை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் பிரச்சனை தீரும்! இளநரை மாயமாகும்!

tamiltips

மாதவிலக்கு வலி நீக்கும் வாழைப்பூ, மேலும் வேர்க்கடலை மற்றும் நாவல்பழம் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வோம்

tamiltips

பால் காய்ச்சுவதிலும் சில வழிமுறைகளை பின்பற்றினால் பாலின் சத்துக்கள் அழியாமல் உட்கொள்ளலாம்!

tamiltips

வீட்டிலேயே கை விரல்கள், கால் விரல்களை அழகாக்கும் வழி தெரியுமா?

tamiltips

கொரோனா வைரஸை தடுக்க அந்தரத்தாமரை..! மரபுவழி மருத்துவர்கள் காட்டும் புதிய வழி..!

tamiltips

பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!

tamiltips