Tamil Tips
லைஃப் ஸ்டைல்

டீன் ஏஜ் காலத்தில் பியூட்டி பார்லர் போகாமல் எப்படி அழகை பாதுகாக்க வேண்டும் தெரியுமா?

இந்த வயதிலேயே பியூட்டி பார்லருக்குப் போய் ஃபேஷியல், பிளீச் போன்ற அலங்காரம் செய்ய வேண்டும், எந்நேரமும் பளீச்சென்று இருக்க வேண்டும் என்று விரும்புவது பருவ இயற்கை. ஆனால், இது அதற்கான வயதல்ல என்பதை உணர வைக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால், இந்த வயதில் அவர்களது சருமம் இயற்கையிலேயே பொலிவுடன் திகழும். இதனை செயற்கை பொருட்கள் கொடுத்து கெடுக்காமல் இருந்தாலே போதுமானது.

ஆனாலும் பரத நாட்டியம் அல்லது திருமணம் போன்ற விஷேசங்களுக்குப் போகும் போது அல்லது பருவினால் பாதிக்கப்பட்டவர்கள் அழகு நிலையம் செய்ய ஆசைப்படுவதுண்டு.  அப்படி செய்தே தீர வேண்டும் என்றால் அவர்கள் மினி ஃபேஷியல் செய்து கொள்ளலாம். இதனை 13 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் செய்து கொள்ளலாம். இந்த வயதில் பலருக்கு பருக்கள் ஏற்படுவது இயற்கை. அதனை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வப்போது கிள்ளி விடுவார்கள். அப்படி பருக்களைக் கிள்ளிவிட்டால் மேலும் மேலும் பரவத்தான் செய்யும். மூக்கின் இருபுறமும், தாடைகளிலும், மேவாயிலும், கருப்பு வெள்ளைப் புள்ளிகள் சிலருக்குத் தோன்றக்கூடும். இவை எல்லாமே முகத்தில் அழுக்குச் சேருவதால் தோன்றுவது ஆகும்.  இதனை வீட்டிலேயே சரி செய்து கொள்ள முடியும்.

Thirukkural

ஒரு பாத்திரத்தில், நன்றாக ஆவி பறக்கும் சூட்டில் நீரை வைத்துக் கொண்டு, தலைமுடிப்பகுதி, காதுப்புறங்கள் ஆகியவற்றை மூடி, முகம் நன்றாக படும்படி 3 முதல் 5 நிமிடம் வரை கண்களை மூடிக் கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். முகம் முழுவதும் வியர்த்து, முகத்திலிருந்து அழுக்குகள் வெளியே வந்து விடும். ஒரு துண்டை எடுத்து, முகம் முழுவதும் அழுத்தித் துடைத்து அழுக்கை நீக்கிவிடவும்அதன்பின்னர், முல்தானிமட்டியை பன்னீரில் குழைத்து, முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து, ஈர துண்டு வைத்து துடைக்க வேண்டும். இதன்பின் தேவையெனில் ஐஸ் கட்டியை முகத்தில் பரவலாகத் தேய்த்துக் கொள்ளலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

tamiltips

பால் காய்ச்சுவதிலும் சில வழிமுறைகளை பின்பற்றினால் பாலின் சத்துக்கள் அழியாமல் உட்கொள்ளலாம்!

tamiltips

இசை கேட்டுக்கொண்டு தியானம் செய்தால் உங்கள் மன அழுத்தம் குறைவது நிச்சயம்!

tamiltips

மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

பிஞ்சு கத்திரிக்காவா பார்த்து சாப்பிட்டா கொழுப்பைக் கரைக்கலாம் !!

tamiltips

மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?

tamiltips