Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஃபாஸ்ட் ஃபுட் ரசிகரா நீங்க..? ஆண்மைக்கு ஆபத்து காத்திருக்கு !!

பள்ளி மாணவர்கள் கூட வீட்டிலிருந்து உணவு எடுத்துச் செல்வதை கவுரவ குறைவாக நினைத்து வெளியில் விற்கும் தின்பண்டங்களையும், குளிர்பானங்களையும் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களது உடல் நலன் பெரும் அளவில் பாதிக்கப்படுவது அவர்களுக்கே தெரிவதில்லை
எல்லோரும் சாப்பிடுகின்றனர் என்பதற்காகவும், ஒரு பொழுது போக்காகவும் இப்படி துரித உணவு வகைகளை நாடுகின்றனர். இப்படி சாப்பிடும் துரித உணவு வகைளிலும் குளிர்பானங்களிலும் எந்தவித சத்துக்களும் இல்லை என்பதுடன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க இவை காரணமாகின்றன.

பர்கர் : இது  தவிடு நீக்கி சுத்திகரிக்கப்பட்ட மாவில் செய்யப்படுவதுதான். இதில் எந்த சத்தும் இல்லை. கொழுப்பு மட்டுமே உண்டு.

பிட்ஸா : இதில் சுத்திகரிக்கப்பட்ட, தவிடு நீக்கப்பட்ட மாவுதான் பயன்படுத்தப்படுகிறது. தவிடு நீக்கப்பட்ட தானிய மாவில் மாவு சத்து மட்டுமே உள்ளது. இதில், பயன்படுத்தப்படும் காய்கறிகள், பாலாடைக்கட்டி போன்றவை எல்லாமே நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டவை. அதனால்  உயிர்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளனவா என்பது சந்தேகத்திற்குரியது! வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது இதய நோயாளிகளுக்கு ஏற்றதல்ல

பிரஞ்ச் 
பிரை: இந்த நீள உருளைக்கிழங்கு வறுவலில் மாவுச் சத்து மட்டுமே உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை கூடும், மலச்சிக்கல் ஏற்படும்.

நூடுல்ஸ் : இதுவும் மாவுச்சத்து மட்டுமே மிகுந்த உணவுதான். இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் மலச்சிக்கல் ஏற்படும்.

Thirukkural

சோலா பூரி : இது மிக பெரிய பூரியாகும், தொட்டுக் கொள்ள மசாலா கொண்டை கடலை தருவார்கள். சோளா பட்டூரா திரும்பத்திரும்ப பொரித்த எண்ணையிலே பொரித்ததை சாப்பிடும்போதும் காரமான மசாலாவை சாப்பிடும்போதும் வயிற்றுக்கோளாறு ஏற்படும்.

வறுவல் : இதில் கொழுப்பு சத்து அதிகம். பல ரசாயனங்களை சேர்த்து வறுவல் மொறு மொறுப்பாக வைக்கப்படுகிறது. உடல் குண்டாகும். மந்த புத்தி ஏற்படும்.

குளிர்பானங்கள் : ரசாயன குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு எந்த விதத்திலும் உதவாது. குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு பந்தாவாக டி.வி. விளம்பரங்களில் இந்த குளிர்பானங்களுக்காக போஸ் கொடுப்பார்கள் பல பிரபலங்கள். ஆனால் இந்த குளிர் பானங்களை நீண்ட நாட்களாக சாப்பிட்டால் உடல் நலம் கெடும் என்பதில சிறிதும் சந்தேகம் இல்லை.

நவநாகரீக உலகில் எல்லாமே வேகமாக நடக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. சாப்பிடும் விஷயத்திலும் அப்படித் தான். உணவு விடுதிகளுக்குச் சென்று ஆர்டர் செய்துவிட்டு அரைமணி நேரம் காத்திருக்க அவகாசமில்லை. உணவாக சாப்பிடுவதற்குப் பதிலாக தண்ணீர் ஆகாரமாக சாப்பிட்டால் என்ன என்று யோசிக்கும் காலமிது. அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட்எனப்படும்துரித உணவகங்கள் பெருகி வருகின்றன.

ஒருவர் தொடர்ந்து துரித உணவகத்தில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கு ஆபத்தாகலாம். எங்கு சாப்பிட்டாலும் தரமான உணவை முறை யான தயாரிப்பில் தயாரிக்கப் படுவதை சாப்பிடுகி றோமோ என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடங்களுக்கு யார்தான் அதிகம் போகிறார்கள்? முதல் இடம் டீன் ஏஜ்காரர்களுக்குத்தான். குழந்தைகளும், அலுவலகம் போவோரும் கணிசமான அளவுக்கு ஃபாஸ்ட்டை நாடுகிறார்கள். அடுத்த ஆபத்து இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. ஆம், இவர்களுக்கு நரம்புகளின் சுறுசுறுப்புத்தன்மை குறைந்து ஆண்மைக் குறைவு ஏற்படுவது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளியே சாப்பிட வேண்டும் என்றால் சரியான உணவகத்தை தேர்வு செய்யுங்கள். பொதுவாகவே  உணவகத்தின் அடிப்படை தத்துவமே குறைவான நேரத்தில் சமைப்பது, அதிகமான தீயை உபயோகிப்பது நிறைய அயிட்டங்கள் விற்பனைக்கு இருந்தாலும் அவரவர் தேவைக்கு ஏற்ப சரியான, பொருத்தமான உணவை திட்டமிட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

சமையலறை எளிதில் கண்ணில் படக் கூடியதாக அமைந்திருக்கிறதா என்பதை பாருங்கள். பரிமாறக்கூடியவர்கள் கனிவாக பேசினாலும் சுத்தபத்தமாக இருக்கிறார்களா என்று நோட்டமிடுங்கள்.

பாத்திரங்களை கழுவ நல்ல தண்ணீரை உபயோகிக்கிறார்களா? அல்லது ஒரே தண்ணீரை நாள் முழுவதும் உபயோகிக்கிறார்களா என்பதையும் பார்க்கலாம். வாழை இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். பழைய பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லதல்ல.

குடிநீர் பாதுகாப்பானதாக இருக்கிறதா என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குளிர்பான மோகத்தால் குடிதண்ணீர் கூட இரண்டாவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. அதில் சிட்ரிக் ஆசிட்டும், ஃபாஸ்பாரிக் ஆசிட்டும் அதிகம். குளிர்பானங்களுக்குப் பதிலாக பழச்சாறு குடிக்கலாம் அல்லது மில்க் ஷேக் அருந்தலாம்.

எப்போதாவது ஒரு முறை ஆசைக்காக இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை, தொடர்ந்து அல்லது வாரந்தோறும் என்று இப்படிபட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ஆபத்தை அருகில் அழைப்பதாகும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலின் சர்க்கரை அளவை அதிரடியாக குறைக்க நாவல் பழத்தை இப்படி சாப்பிடுங்க!

tamiltips

ரயில்வேயில் பணியில் சேர ஆசையா? உங்களுக்கு இன்னும் 15 நாள் அவகாசம் இருக்கு!

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா! முழுமையாக குணமடைய வெந்தய கீரையை சாப்பிடுங்க!

tamiltips

கட்சிக்கு கலயத்தில் பழைய சோறு! ஜிஎஸ்டியுடன் ரூ.50! மதுரை ஓட்டலில் சுடச்சுட விற்பனை!

tamiltips

தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 1

tamiltips

உங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆயிடுச்சா..? கொரோனா தாக்குதல் ஆபத்து அதிகம்.

tamiltips