பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தாண்டி சீரியல்களும் அதிக பிரபலம். அப்படி மிகவும் ஹிட்டாக ஓடிய சீரியலில் ஒன்று ஆயுத எழுத்து.
இந்த சீரியலில் முதலில் வேறு நாயகன்-நாயகி இருந்தார்கள், அவர்கள் இருந்த வரையில் கதை நன்றாக தான் ஓடிக் கொண்டிருந்தது.
இடையில் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை, நாயகன்-நாயகி இருவரையும் ஒரே நேரத்தில் மாற்றினார்கள். லாக் டவுன் பிறகு ஓடிக் கொண்டிருந்த இந்த சீரியலை இப்போது திடீரென நிறுத்தியுள்ளார்கள்.
இதுகுறித்து நடிகை சரண்யா தனது இன்ஸ்டாவில், சட்டென்று ஆயுத எழுத்து சீரியலை ஏன் நிறுத்தினார்கள் என்று எனக்கே தெரியவில்லை.
விரைவில் புதிய சீரியலோடு நான் உங்களை சந்திக்கிறேன் என பேசியுள்ளார்.